சேரா:
வட்டார வழக்குச் சொல் அகராதி
நிலத்தைத் துளைத்துச் சென்று தங்குவது
313
என்னும்
பொருளில் பூரான் எனப்படும் உயிரி தூத்துக்குடி வட்டாரத்தில் சேரா என வழங்கப்படுகிறது. பூரல் = துளைத்தல், மூக்குப்பூரல் மூக்குக் குத்தல். பூரான் நிறம் சிவந்தது. சேரா என்பது சிவப்பானது என்னும் பொருளில் வழங்குகின்றது.
சேவை:
தொண்டு என்னும் பொருளில் சேவை எனப்படுவது பொது வழக்கு. ஆனால் இடப்பொருளில் பக்கம் என வழங் குதல் நெல்லை வட்டார வழக்காகும். மடத்துச் சேவை, காட்டுக்குச் சேவை என்பவை மடத்துப் பக்கம், காட்டுக்குப் பக்கம் என்னும் பொருளவை. இடியாப்பத்தைச் சேவை என்பது பார்ப்பனர் வழக்கு. செவ்விய ஊண் என்னும் பொருளது. சையல்:
சரிதல், சாய்தல் என்பனவும் சரிந்து சாய்தல் என்பதுவும் பொது வழக்குச் சொற்கள். சாய்தல் என்பதைச் சையல் என நிலக்கோட்டை வட்டாரத்தார் வழங்குவர். து ‘சாய்ந்து சரிதல்' என்பதன் தொகுத்தல் ஆகும்.
சொக்கப்பனை:
கோயில்
விழாக்களின்
போது
காளுத்தப்படும்
நிகழ்ச்சிகளுள் ஒன்று சொக்கப்பனை என்பது. பனை மரம் ஒன்றனை நிறுத்தி, அதன் மட்டை ஓலை முதலியவற்றால் சுற்றும் சூழ மூடி, தீமூட்டி எரிப்பது சொக்கப்பனையாகும். முகவை நெல்லை வழக்கு.
சொக்கன்:
து
சொக்கு என்பது அழகு, விருப்பு முதலிய பொருளது. சொக்கன் என்பது ஆட் பெயராக இல்லாமல் குரங்கு என்னும் பொருளில் விளவங்கோடு வட்டார வழக்கில் உள்ளது சொக்குதல், வளைந்து கூனியிருத்தல் பொருள தாகும். அதனால் குரங்குக்கு ஆகியது.
சொங்கல்:
ஆழம் என்னும் பொருளில் சீர்காழி வட்டாரத்தில் சொங்கம் என்னும் சொல் வழங்குகின்றது. சுரங்கம் என்னும்
-