362
பரிதல்:
இளங்குமரனார் தமிழ்வளம்
―
1
கதிர் ஈனல் என்பது பொதுவழக்கு. கதிர் ஈனுதலைப் (பயிர்) பரிதல் என்பது முகவை வட்டார வழக்கு. கதிர் பரியும் நேரம் இப்பொழுது மழை பெய்தால் பொட்டு உதிர்ந்து போகும் என்பர். பரிதல் வெளிப்படுதல்; தோன்றுதல்.
பருக்குதல்:
=
ஆட்டுக்குட்டியைப் பால் குடிக்கச் செய்தலைப் பருக்குதல் என்பது ஆயர் வழக்கு. தானே தாயை அடுத்துப் பால் குடியாக் குட்டியைப் பால் குடிக்கவைப்பது பருக்குதல் ஆகும். பருகச் செய்தல் பருக்குதல். இவ் வழக்கு பொதுவழக்காகவும் கூறும் அளவில் அறிய வாய்க்கின்றது. முகவை, மதுரை வட்டாரங் களுடன் திருச்சி வட்டாரத்திலும் கேட்கும் சொல்லாக உள்ளது. பருப்பு:
பருப்பு, பயற்றை உடைத்துச் செய்யப்பட்டது. தோல் உரித்து ஆக்கப்பட்டது. பருப்பு என்னும் சொல், பருப்புக் காண்டு அரைக்கப்படும் துவையலைக் குறித்து, பின்னர்த் துவையல் என்னும் பொதுப் பொருளில் விருதுநகர் வட்டாரத்தில் வழங்குகின்றது.
பருப்புக் குழம்பு:
சாம்பார்' இல்லாச் சாப்பாடா? பருப்பு இல்லாத் திருமணமா? என்னும் பழமொழியும் பொய்த்துப் போனது. சாம்பார்தான் உண்டேயன்றிப் பருப்பும் இல்லை; குழம்பும் இல்லை. இன்னும் புளிக் குழம்பு, காரக் குழம்பு, வற்றல் குழம்பு, சுண் க் குழம்பு எத்தனை வகை. மோர்க் குழம்பை விட முடியுமா? ஒரு சாம்பார் என்ன வேலை செய்கின்றது!
பருமல்:
-
UL கில் ஊன்றி நிறுத்திப் பாய் கட்டப்படும் நெடுமரம் மூங்கில் கழை - பருமல் என்று மீனவர்களால் வழங்கப்படுகிறது. பழநாள் மரக்கால், நாளி என்பவை மூங்கிலால் அமைந்தவை என்பதை அறிந்தால் அதன் தடிப்பு ஆகிய பருமை புலப்படும். பல்லம்:
பலவகைக் காய்களைப் போட்டு வைக்கத் தக்கதாகவும் அகன்றதாகவும் தடுப்புகள் அமைந்த கட்டுக்கொடிப் பின்னல்