உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 1.pdf/380

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வட்டார வழக்குச் சொல் அகராதி

363

தட்டுகளைப் பல்லம் என்பது எழுமலை வட்டார வழக்காகும். ஐந்தறைப் பெட்டியைப் போலப் பல வகைக் காய்களைத் தனித் தனியே போட்டுவைக்க அமைந்தது இது. பல தட்டு (தடுப்பு) உடை யது பல்லம் எனப்பட்டது.

பல்லுச் சோளம்:

சோள வகையுள் ஒன்று வெள்ளைச் சோளம். அதனை முத்துச் சோளம் என்பது பொது வழக்கு. அதன் வெண்ணிறம் குறித்துப் பல்லுச் சோளம் என வழங்குதல் கண் வட்டார வழக்காகும்.

L

பலகையடைப்பு:

கண்ட

மனூர்

வீட்டிலும் காட்டிலும் பொருள்கள் போட்டு வைக்கவும் காவல் கருதி அமர்ந்திருக்கவும் அமைக்கப்படுவது பரண் ஆகும். பரண் என்பதும் பரணை என்பதும் பொது வழக்கு. அதனைப் பலகை அடைப்பு என்பது அருப்புக் கோட்டை வட்டார வழக்கு. பலகையால் அடைத்துப் பரப்பப்படுவதால் பெற்ற பயர். மற்றைப் பரண் கம்புகளைப் பரப்பி அமைக்கப் பட்டதாகும்.

பலம்:

பலம் என ஒரு நிறைகல் (எடைக்கல்) இருந்தது. பலம் வலிமைப் பொருளிலும் வழங்கும். அது வலம் என்பதன் திரிபாகும். இனி மாடு பலப்பட்டிருக்கிறது என்பதும் பயிர் பலன்(ம்) பிடித்திருக்கிறது என்பதும் உழவர் வழக்கு ஆகும். மாட்டுத் தரகர் வழக்கிலும் முன்னது உண்டு.

பலிசை:

6

பலிசை என்பது வட்டி என்னும் பொருளில் நாகர் கோயில் வட்டார வழக்காக உள்ளது. கல்வெட்டுகளிலும் இச் சொல் இப் பொருளில் ஆளப்படும். பலிசை என்பது இலேசு (ஊதியம்) என்னும் பொருளில் சிந்தாமணியில் வழங்குகின்றது. வட்டி எனினும், ஊதியம் எனினும் எளிமையாக இருக்க வேண்டும் என்னும் கருத்தினது அது.

பழுது:

பழுது என்பது பயன்படாதது, கெட்டுப் போனது என்பது பொது வழக்கு. “பழுது பயமின்றே” என்பது தொல்காப்பியம். இனி வைக்கோல் புரியைப் பழுது என்பது முகவை, மதுரை