364
இளங்குமரனார் தமிழ்வளம்
―
1
மாவட்ட வழக்காகும். பழு என்பது சுமை. அதனைக் கட்ட
உதவுவது பழுது ஆயது.
பழுப்பு:
சோளத்தட்டை, கரும்புத் தட்டை உள்ளீட்டைப் பழுப்பு என்பது பொது வழக்கு. மகளிர் காது குத்திய நாளில் காதுத் துளையை அகலப்படுத்தப் பழுப்பு வைத்தல் வழக்கம். இங்கே பழுப்பு என்பது ‘சீழ்' என்னும் பொருளில் வட்டார வழக்காக உள்ளது. பழுத்து வழியும் சீழைப் பழுப்பு என்றனர் போலும். இது விளவங்கோடு வட்டார வழக்கு.
பள்ளக்கல்:
ஒரு காலத்தில் ஏதாவது ஒரு தவசத்தை இடிக்கப் பள்ளமான கல்லைப் பயன்படுத்தினர். அப் பழைய வரலாற்றை விளக்குவது போல முதுகுளத்தூர் வட்டாரத்தார் பள்ளக்கல் என இடிக்கப் பயன்படுத்தும் உரலைக் குறிப்பிடுகின்றனர்.
பள்ளம்+கல்=பள்ளக்கல்.
பள்ளயம்:
வைக்கோலைப் பரப்பி, அதன்மேல் துணியை விரித்து அகலமாகப் படை யல் செய்வதைப் பள்ளயம் என்பது பேராவூரணி வட்டார வழக்காகும். இவ் வழக்கம் கொங்கு நாட்டிலும் உள்ளது. பள்ளம் தோண்டிப் பரப்பி வைத்த வழக்கத்தில் இருந்து இப் பெயரீடு ஏற்பட்டிருக்கும்.
பள்ளை:
6
விலாப்புறத்தின் உட்பாகம் கமுக்கூடு என வழங்கப்படும். அது அதன் உட்குழிவு நோக்கிப் பள்ளை என வழங்கப்படுதல் வில்லுக்குழி வட்டார வழக்காகும். அது விலாப்புறம் என வழங்கப்படுதல் அகத்தீசுவர வட்டார வழக்காகும். பள்ளை ர = பள்ளம். ஆட்டுவகையுள் ஒன்று பள்ளையாடு.
பற்றுக்காடு:
நீரருகே சேர்ந்த நிலம் நன்செய் ஆகும். குளத்துப்பற்று, ஏரிப்பற்று, கால்வாய்ப் பற்று என நீர் நிலை அடுத்துப் பற்றி இருக்கும் இடம் பற்று எனப்படும். பாலமேட்டுப் பகுதியில் வயற்காடு என்பது பற்றுக்காடு என வழங்கப்படுகிறது. பற்றுக்கு வரும் மடை பற்றுவாய் மடை என்பது அறியத் தக்கது.