378
பொதியல்:
―
இளங்குமரனார் தமிழ்வளம் 1
பொதியல் என்பது மூடுதல் பொருளது. வெயில் மழை புகாமல் காப்பாக அமைந்த குடையை-ஓலைக் குடையை-ப் பொதியல் என்பது நெல்லை, குமரி மாவட்ட வழக்காகும். நுங்கு, ஊன் முதலியவை பனை ஓலையைக் குடையாகச் செய்த தூக்கில் கொண்டு போதல் பண்டு பண்டு தொட்டே வழங்கிய வழக்காகும். ஓலைக் குடை என்பது அதன்பெயர். மூடி வைப்பதால் பொதியல் ஆயது. பொதிசோறு’ தேவாரச் செய்தி. 'பொதிமூடை’ - பட்டினப்பாலை.
பொருத்திச் சக்கை:
ய
ஒன்றொடு ஒன்று பொருந்தி நிற்கும் சுளைகளையுடை அன்னாசி (செந்தாழை)ப் பழத்தைப் பொருத்திச் சக்கை என்பது குமரி மாவட்ட வழக்கு. பிரிக்க இயலாவகையில் பொருந்திய செறிவு நோக்கி வழக்கூன்றிய பெயர் இது.
பால்லம்:
பொல் என்பது துளை. முறம் பெட்டி முதலியவற்றில் ஓட்டை விழுமானால் பொல்லம் பொத்துதல் (துளையை நாரால் தைத்து மூட்டுதல்) அண்மைக்காலம் வரை வழக்கு. "பொல்லம் பொத்தலையோ பொல்லம்” எனத் தெருவில் கூவி வருவார் இருந்தனர். 'பொல்லாப் பிள்ளையார்’ மெய்கண்டார் வரலாற்றில் இடம் பெற்றவர். பொல்லல், உளிகொண்டு வேலை செய்தல். பொல்லாமை துளையாமல் தன்னிலையில் அமைந்த பிள்ளையார். பொல்லம் துளைப் பொருளில் வழங்குதல் தென்னகப் பெருவழக்கு.
பொலி:
உழவர் சூடடித்துத் தூற்றிய தவசக் குவியலைப் பொலி என்பர். வாழ்வின் பொலிவுக்கு மூலமாக இருப்பது அது. அதனால் பெற்ற பெயர் அது. கழனியில் போட்ட வித்து களத்தில் மணிக்குவியலாகக் குவிந்தால் தான் களஞ்சியத்தில் சேர்ந்து காலந்தள்ள உதவும். ஆதலால் “பொலி பொலி” எனக் கூவி அள்ளுதல் பொலி எனப்பட்டது. அதில் இருந்து பொலிவு என்னும் சொல் ஆயது.
பொள்ளுதல்:
நட்டாலை வட்டார வழக்காகப் பொள்ளுதல் என்பது சுடுதல் என்னும் பொருளில் வழங்குகின்றது. பொள்ளல், துளை