வட்டார வழக்குச் சொல் அகராதி
379
என்னும் பொருளில் வருதல் பொது வழக்கு. குழல் முதலிய வற்றைத் துளையிடுவதற்குக் கம்பியைக் காயவைத்துச் சுடுதலும் துளைத்தலும் வழக்கமாதல் கொண்ட செய்முறை வழிப் பொருளாம் இது.
பொளி:
ஒருவர் நிலத்திற்கும் மற்றொருவர் நிலத்திற்கும் ஊடு எல்லையாக அமைந்த வரப்பைப் பொளி என்பது தென்னக வழக்கு. கடலின் ஊடும் அலைப்பகுதி, அலை இல்லாப் பகுதி இவற்றின் ஊடிடத்தைப் பொளி என்பதும், மீன்பிடி பகுதி களைப் பிரித்துப் பொளி என்பதும் மீனவர் வழக்கு. இது குமரி மாவட்ட வழக்கு.
பொறுதி:
வ
கிள்ளியூர் வட்டார வழக்கில் பொறுதி என்பதோர் சொல் வழக்கில் உள்ளது. அது, வீடு என்னும் பொருளது. இப் பொருளின் வழியாக உள்ள வாழ்வியல் குறிப்பு, மிகச் சிறந்ததாம். பொறுமை பேணல், பொறுத்துக் கொள்ளுதல், தாங்குதல் (பொறுத்தல்) வீட்டு வாழ்வில் பேணிக் கொள்ளத்தக்க கடப்பாடுகள் என்பதை வலியுறுத்தும் ஆட்சியாம். அமர்க்களத்தில் தாங்குவார் போலத் தமர்க் களத்திலும் தாங்குதல் வேண்டும் என்பதை “ஆற்றுவார் மேற்றே பொறை” என்னும் வள்ளுவம் கொண்டு தெளியலாம்.
பொன்னையா:
பொன்னாத்தாள்
அப்பாவின் அப்பாவைப் பொன்னையா என்பது நெல்லை வழக்கு. அவ்வாறே அம்மாவின் அம்மாவைப் பெற்றவர் எனப்படுவார். பொன், பொலிவும் அருமையும் மிக்க பொருளாதல் போன்றவர் அவர் என்பதாம். போச்சி:
நீர்ச் செம்பைப் போச்சி என்பது நெல்லை வழக்காகும். அதனைப் போகணி என்பதும் நெல்லை வழக்கே. 'புவ்வா’ என்னும் உணவுப் பெயரும் ‘புகுவாய்' என்பதன் வழிவந்த சொல். நீர் கொள்ளவும் வெளியே விடவும் அமைந்த குவளை அல்லது நீர்ச் செம்பைப் போச்சி (போகச் செய்வது) என்று வழங்கினர் ஆகலாம்.