உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 1.pdf/406

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வட்டார வழக்குச் சொல் அகராதி

389

சிலம்பில் “மாறிவருவன்” எனவருவது இலக்கிய ஆட்சி. திருச்சி மாவட்ட வழக்கில் மாறிவருதல் விற்றுவருதல் பொருளில் வழங்குகின்றது. பொருளைக் கொடுத்து வோறொரு பொருளை மாற்றி வாங்கி வருதல் என்பதாம்.

மாறுகாற்று:

காற்று

காலம் என்பது கார் காலத்தையே குறிக்கும். என்பது கிழக்கில் இருந்து நீர் கொண்டுவரும் காற்றையே குறிக்கும். அதற்கு மாறான காற்று மேல் காற்று. கோடைக் காற்று என்பது அது. ஆடை கோடை என்பதில் ஆடை கார்காலம்; கோடை, கோடை காலம். மேல் காற்றை

மாறுகாற்று என்பது சீர்காழி வட்டார வழக்காகும்.

மிகை:

66

மிகுதி என்னும் பொருளது மிகை. அதற்குக் குற்றம் என்னும் பொருள் காரியாபட்டி வட்டார வழக்கில் உள்ளது. மிகுதிக்கண் மேற்சென்று இடித்தல்” என்றும் வள்ளுவம் மிகுதி என்பது குற்றத்தையேயாம். அளவை விஞ்சுதல் குற்றமாம். எதிலும் அளவு வேண்டும் என்பது நெறிமுறை.

மிதப்பு:

மிதவை, மிதவைக் கட்டை என்பவை பொதுவழக்கில் உள்ளவை. மிதப்பு என்பது நீர்மேல் மிதக்கும் வெண்ணெயைக் குறிப்பதாக மானாமதுரை வட்டார வழக்காக உள்ளது. பொறுப்புணர்ந்து செய்யாமல் தட்டிக் கழிப்பதை மிதப்பு என்பது தென்னக வழக்கு.

மிதிதும்பை:

கால்மிதியாகப் பயன்படுவதை மிதிதும்பை என்பது நெல்லை வழக்கு. தும்பு என்பது பலவகை முடிப்புகளை உடையது. ஆதலால் பின்னல் அமைப்பு உடைய கால் மிகுதியைக் குறித்துப் பின்னர்ப் பொதுப் பொருள் பெற்றிருக்கும்.

மிளகாய்க் கல்:

அரைகல், அரைசிலை, அம்மி என்னும் பொருள் பொது வழக்கானது. அதனை மிளகாய்க் கல் என்பது திண்டுக்கல் வட்டார வழக்காகும். மிளகாய் என்பது பல சரக்கு என்பது தழுவி நின்றது.