390
முக்கட்டு:
―
இளங்குமரனார் தமிழ்வளம் 1
மூன்று கட்டு என்னும் பொருளில் வருவது அன்று முக்கட்டு என்னும் அணிகலம். மூன்று கல்லை வைத்துக் கட்டுதலால் அமைந்த காதணி முக்கட்டு ஆகும். இஃது ஆண்கள் அணிகலம். நெல்லை முகவை வழக்கு.
முக்காணி:
ய
கட்டைவண்டியின் முகப்புத் தாங்கலாகக் குரங்குக் கட்டை என ஒரு வளைகட்டை உண்டு. அதன் வளைவு கருதிய பெயர் குரங்குக் கட்டை. வண்டியின் முகப்பில் அதன் பாதுகாப்பாக இருத்தலால் முற்காணி, முக்காணி ஆயது. முகக்காணி முக்காணி எனினுமாம். வண்டியின் பின்னாலும் தாங்கு கட்டை உண்டு. தேனி வட்டார வழக்கு முக்காணி என்பது.
முக்குணி:
ய
அடுப்புக் கூட்டு என்பது ஆய்த எழுத்தின் வடிவு. முப்பாற் புள்ளி என்பதும் அது. காதணிகளுள் ஒன்று முக்கட்டு. மூன்றுகல் உடை யது. அது போல் மூன்று குமிழ் உடைய அடுப்பின் வடிவு நோக்கி, முக்குணி என்பது, நெல்லை வழக்கு. மூன்று கல்லை வைத்து அடுப்பு உண்டாக்குதல் நாட்டு வழக்கம். முக்கணியாக இருந்து முக்குணி எனப் பெயர் பெற்றிருக்கலாம். முட்டி:
தட்டு முட்டு என்பது சமையலறைப் பொருள்கள். பிச்சை முட்டி என்பது இணைச் சொல். முட்டி என்பது வட்டி என்னும் பொருளில் சென்னை வட்டாரத்தில் வழங்குகின்றது. முட்டிக் குனியும் நிலையில் வாங்கப்படுவதும், கொடுக்கப்படுவதுமாம் வட்டியை உணர்ந்து பெயரிட்ட வழக்கு அது.
முட்டை:
பூ அரும்பு திரண்ட நிலையில் மொக்கு என்றும், மொட்டு என்றும் வழங்குதல் பொது வழக்கு. அதனை முட்டை என்பது கொங்கு நாட்டு வழக்கு. அது வடிவொப்புக் கருதியது. முடவாண்டி:
கால் கை முடம்பட்டவர்கள் ‘முடவாண்டி’ எனப்படுதல் கொங்கு நாட்டு வழக்கு. முடவாண்டியர்களைப் பேணுதற்கு அறச்சாலை அமைத்தனர். அவர்களைக் கண்காணித்து உதவி