உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 1.pdf/74

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வழக்குச் சொல் அகராதி

57

போனான், கிண்டிக்கிழங்கு எடுத்துவிட்டனர்.” என்பதில் கமுக்க வெளிப்பாடும் வெளிப்படுத்திய வகையும் வெளிப்படுவனவாம். கிண்டிக்கிளறுதல் - துருவித் துருவிக் கேட்டல்

கோழி தீனியைத் தின்னுதற்குக் கிண்டும் கிளறும். பளிக்குத் தளமாக இருந்தாலும் கிண்டிக் கிளறலைக்கோழிவிடுவது இல்லை. “பழக்கம் கொடிது பாறையினும் கோழிகிண்டும் என்பது பழமொழி.

சிலரிடம் சில செய்திகளை வாங்குவதற்காகக் கிண்டிக் கிளறுவது உண்டு. சினமூட்டியும். சிறுமைப்படுத்தியும், துன் புறுத்தியும் செய்திகளைப் பெறத்துடிப்பர். காவல் துறையினர், துப்பறிவாளர், வழக்கறிஞர் ஆகியோர் பிறரைக் கிண்டிக் கிளறுதலில் தேர்ச்சி மிக்கவர்கள். தன்னைத்தானே கேட்டுக் கொள்ளலும், பிறரை அறிவுடையராக்க வினாவுதலும் கிண்டிக் கிளறல் ஆகாது. குறை காண்பதற்காகக் கேட்பதே கிண்டிக் கிளறல் என்க. உண்மையறியவும் இது துணையாவதுமுண்டு. கிழிகிழியென்று கிழித்தல் - வசை கூறல்

கிழி என்பது துணி. கிழியஞ்சட்டி என்பதும், பொற்கிழி என்பதும் துணியென்னும் பொருள் தரும் கிழி வழிப்பட்டனவே. கிழிப்பதால் கிழி எனப்பட்டது. அறுவை, துணி என்னும் சொற் களையும் எண்ணுக.

துணியைக் கிழிப்பதுபோல், மானம் கெடப் பேசுதலைக் கிழித்தல் என்பது குறித்தது. மானம் போர்வை, சட்டை போல் வது. போர்த்து மூடும் அதனைக் கிழிப்பதுபோல மானப் போர் வையை அல்லது சட்டையைக் கிழித்து ஊருக்கு இழிவு வெளிப் படச் செய்வது ‘கிழி’ யாயிற்று. கிழித்தலும் ஆயிற்று, பல்கால், பல்வகையில் மானங்கெடப் பேசுதல் ‘கிN AN’ என அடுக்காயிற்று. கிழித்தல் - வைதல், மாட்டாமை.

கிழித்தல் துணி. தாள், தோல் முதலியவற்றைக் கிழித்தலை விடுத்து வசைப் பொருளில் வருவது இக்கிழித்தலாம்.

AN AN' என்று கிழித்துவிட்டார் என்றால் சொல்ல மாட்டாத, வாயில் வராத சொற்களையெல்லாம் சொல்லி வைதார் என்பது பொருள். மறைத்து வைத்திருந்த செய்திகளை யெல்லாம் வெளிப்படுத்த வசை கூறலால் முகத்திரையைக் கிழித்தல் போல வழக்கில் வந்ததாகலாம்.