உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 1.pdf/75

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

58

இளங்குமரனார் தமிழ்வளம் 1

கிழித்தல் என்பது செய்யமாட்டாமைப் பொருளிலும் வழங்குகின்றது “நீ செய்து கிழிப்பது எனக்குத் தெரியாது?' என்பதில் செய்யமாட்டாய் என்பது கருத்தாகும்.

கிழித்துக் கொண்டிருத்தல் - கிறுக்காதல்

கிறுக்குப் பிடித்தவர்களுள் சிலர் தாள், துணி ஆகியவை கிடைத்தால் அவற்றைக் கிழித்துக் கிழித்து ஏதோ பெருஞ் செயல் செய்வதாக மகிழ்வர். அதனைக் கண்டவர்கள், கிழித்துக் கிழித்துப் போடுதலைக் கிறுக்குத் தன்மை எனக் கூறினர். அவ்வகையால், கிழித்துக் கொண்டிருத்தல் என்பதற்குக் கிறுக்குப் பொருள் ஏற்பட்டது. துணிக்கடையில் கிழிப்பதைக் கிறுக்கு என்பவரார்? பயனின்றிக் கிழித்தலே சுட்டப்படுவதாம்.

சிலருக்கு ஏதேனும் அறிவுரைத்தால், அவ்வறிவுரை அவர்கள் ஏற்கத்தக்கதாக இல்லாவிடில் “நான் என்ன கிழித்துக் கொண்டா இருக்கிறேன்; இதையெல்லாம் உன்னிடம் கேட்க” என்பது வழக்கம்.

குட்டியைத் தூக்கி ஆட்டில் போடல் - முறைகெடச் செலவிடல் ஆட்டைத் தூக்கிக் குட்டியில் போடல்' என்பதைக்

காண்க.

குட்டுப்படுதல் - தோல்வியுறல்; இழிவுறல்

தவறுக்குத் தரும் தண்டனையாகப் பள்ளிகளில் தரப் படுவது குட்டு. ஆசிரியர் குட்டுதல், பிற மாணவர் குட்டுதல். தானே குட்டிக் கொள்ளுதல் என மூவகையால் நிகழ்வதுண்டு, குட்டுப்படுதல் குறைவு என எண்ணம் உண்டாகி அதனைத் தவிர்க்க முயலவேண்டும் என்பதே அதன் நோக்கு. குட்டுபவன் தகுதியுடையவனாக இருத்தலாவது வேண்டும் என்னும் நினை வால் ‘குட்டுப்பட்டாலும் மோதிரக் கையால் குட்டுப்பட வேண்டும்' என்னும் பழமொழி எழுந்தது. து தோல்விப் பொருளது.

இனிக் குட்டுதல் இப்பொருளில் இருந்து இழிவுபடுத்துதல் என்னும் பொருளுக்கு மாறியபோது “குட்டக் குட்டக் குனி பவனும் கோழை; குனியக் குனியக் குட்டுபவனும் கோழை 6 எனப்பழமொழி எழுந்தது. குட்டுதல் என்பது குட்டுதலால் உண்டாகும் இழிவுப் பொருளுக்கு உண்டாயிற்று.