உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 1.pdf/77

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

60

இளங்குமரனார் தமிழ்வளம்

1

வழக்கு. குடுமியைப் பிடித்து விட்டால் தப்புதல் அரிது. ‘சிக்கம்’ என்பது குடுமி. சிக்கெனப் பிடித்தல் என்பதும் அது. குடுமியில் 'சிக்கு' உண்டாகும். அதனை விலக்குவது பக்குவமாகச் செய் தாலேயே துன்பின்றி இயலும். இல்லாக்கால் வலியும் உண்டாம்; அழிவும் உண்டாம். ஆதலால் குடுமிப்பிடி நெருக்கடி செய்து ‘வைத்துவிட்டுப்போ' என்ற நிலையில் அமைவதாம்.

குடுமியைப் பிடித்தல் - அகப்படுத்தல்

6

சண்டையில் ஒன்று குடுமிப்பிடிச் சண்டை. வளர்ந்த குடுமியைப் பற்றிப் பிடித்துக் கொண்டால், படாப்பாடு படுத்தி விடமுடியும். ஆதலால் குடுமியைப் பிடிக்க இடந்தருதல் இல்லை. குடுமியைப் பிடித்தல் ஆகாது என்பதும், குடுமி அவிழ்ந்தவன் அதனைக் கட்டும் வரை அவனொடு போரிடக் கூடாது என்பதும் முன்னையோர் போர் முறை.

குடுமியைப் பிடித்துக் கொண்டவன் விரும்பியபடியெல் லாம் ஆட்டி அலைக்கழிப்பது போலச் சிலவகை எழுத்துகள், கமுக்கச் செய்திகள் கிடைத்துவிட்டால் அவற்றைக் கொண்டு அலைக்கழிக்கும் கொடுமை நிகழ்த்துவர். அத்தகையவர். “உன் குடுமி என் கையில் இருக்கிறது. அங்கே இங்கே திமிர முடியாது”

என்பர்.

குத்திக்காட்டல் - பழங்குறையை எடுத்தல் கூறல்

குத்துக்குக் கத்தி வேண்டும். இக்குத்து கத்தியில்லாக் குத்து. கத்திக்குத்தினும் கடுவலியும் காலமெல்லாம் மாறாத்தனமும் உடை யது. எப்பொழுதோ ஒரு தவறு நிகழ்ந்திருக்கும். அதனைக் காலங் காலமாக சொல்லிச் சொல்லிப் புண்படுத்துதல் குத்திக் காட்டலாம். அதன் கடுமையைக் காட்ட ‘ஒருபக்கம் குத்தி ஒரு பக்கம் வாங்குவான்' என்பர். இடித்துரைத்தல் என்பதற்கும், இதற்கும் வேறுபாடு உண்டு. ஆங்குக் காண்க.

குதிர் - சுற்றுப் பருத்தல்.

குதிர் என்பது தவசம் போட்டு வைக்கும் குலுக்கை ஆகும். இதனைப் பழங்காலத்தவர் 'கூடு என வழங்கினர். தவசம் போட்டு வைக்கும் குதிர் அடி சிறுத்து இடை பெருத்து முடி சிறுத்துத் தோன்றும், அதுபோல் இடை டை சுருங்க வேண்டிய பெண்டிர் இடை பெருத்திருந்தால் குதிர் போல இருக்கிறாள் என்றும், குந்தாணி போல இருக்கிறாள் என்றும் உவமைச் சுட்டால் சொல்வது வழக்காம். குதிர் என்பது இவண் இடுப்பு விரிவைக் குறித்ததென்க.