உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 1.pdf/78

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வழக்குச் சொல் அகராதி

குதிர்தல் - ஆளாகியிருத்தல்.

61

குதிர் ஓரிடத்திலேயே இருக்கும். அதனை வேறிடத்திற்கு அகற்றி வைப்பதோ மாற்றி வைப்பதோ இல்லை. அதுபோல் வீட்டின் ஒரு பகுதியில் அதற்கென அமைக்கப்பட்ட ஓரிடத்தில் பூப்பு அடைந்த பெண்ணை வைத்திருப்பது அண்மைக்காலம் வரை நிகழ்ந்த வழக்கம். அதனால் அவ்வோரிடத்திலேயே நீராட்டு நிறைவுவரை வைக்கப்பட்டிருத்தல் ‘குதிர்தல்’ எனப் பட்டது. குதிர்ந்திருக்கிறாள் எனின் ஆளாகியிருக்கிறாள் என்பது பொருளாம்.

குதிரையில் வருதல் - குடிமயக்கில் தள்ளாடிவருதல்.

எனப்

‘கள்’ வண்ணிறமானது. அதனால் வெள்ளை படும். அது தண்ணீர் போல்வது. அதனால் வெள்ளைத் தண்ணீர் என்றும் தண்ணீர் என்றும் வழங்கப்படும்; குடித்தவன் தள்ளாடித் தள்ளாடி நடப்பான். அந்நிலையில் உயர்ந்தும் தாழ்ந்தும் அவன் வரும் தோற்றம் குதிரைமேல் வருபவன் தோற்றத்தை விளக்கும். ஆதலால் குடித்து விட்டுத் தள்ளாடிக் கொண்டு வருபவனை வெள்ளைக் குதிரையில் வருகிறான் என்றோ குதிரையில் வரு கிறான் என்றோ கூறுவது வழக்காயிற்று. குதிரையில் வருதல், தள்ளாடிக் குலுங்கி வருதல் என்னும் பொருளுக்கு உரிய தாகியது.

குந்தாணி வேர்விடல் - நடவாதது நடத்தல்

L

குந்தாணி என்பது தகரத்தால் செய்யப்பட்டது. ஒரு கல்லின் மேல் அதை வைத்துத் தவசம் போட்டு இடிக்கப் பயன்படுத்துவர். உரலின் மேல் வைத்தும் இடிக்கப் பயன் படுத்துவர். குந்தாணி, சிந்தாமல் சிதறாமல் இடிக்கப்பயன்படும். இரும்பால் ஆகிய அது, கல்லின்மேல் இருந்து இடிபட அமைந்த அது வேர் விட்டுத் துளிர்த்தலுண்டா? ஈயாக்கருமி ஒருவன் தோ ஒன்றைத் தன்னை மறந்து கொடுப்பானெனின் அவன் கொடை குந்தாணி வேர் விட்டது போல என்பர். நடவாதது நடத்தல் குறியாம் அது.

குப்பை கொட்டல் - சங்கடத்தோடு அல்லது சலிப்போடு வாழ்தல் “உன்னோடு இவ்வளவு காலமாகக் குப்பை கொட்டி

என்ன கண்டேன்

என்று சலித்துப் பேசுவது கேட்கப்படும்

சய்தி.