உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 1.pdf/79

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

62

இளங்குமரனார் தமிழ்வளம்

1

குப்பை கொட்டல் என்பது உரம்போடல், பயிர் ஊட்ட மாக வளர்தற்கு வேண்டியது குப்பை. அக்குப்பை கொட்டாக் கால் பயிர் வளமாக வளராது; வாய்த்த பயன்தராது. அப்படியே, நான் இக்குடும்பத்துக்கு உரமாகவும் ஊட்டமாகவும் இருந்து பாடுபட்டேன். அதற்குப் பயன் என்ன? உன் வசையும் திட்டும் அடியும் தடியும் அல்லாமல் கண்டதென்ன? என்னும் உவர்ப்பின் வழி வந்த வழக்குச் சொல் குப்பை கொட்டலாம்.

கும்புதல் - அடிப்பிடித்தல்

சோறு கறி வேகுங்கால் நீர் இன்மையாலும் கிண்டி விடாமையாலும் அடிப்பிடித்து விடுவது உண்டு. அடிப்பிடித் தலைக் கும்புதல் என்பர். அதனால் ஏற்படும் நெடியைக் கும்பி மணக்கிறது எனக் கூறுவர். “கும்பிப்போய் விட்டது; கும்பிக்கு ஆகாது என்பர். பின்வரும் கும்பியாவது வயிறு உடலுக்கு ஒவ்வாது என்பதாம். குப்பல், குப்புதல், குப்பை, குப்பென்று முளைத்தல், குப்பென்று வியர்த்தல் என்பனவெல்லாம் செறிவுப் பொருளன. ஓரிடத்துத் திரண்டு பற்றிக் கொண்டது கும்புதலாம். 'கும்மிய கருப்புக் கட்டி இனிப்பும் கெட்டு, சுவையும் கெட்டுச் சேர்ந்ததையும் கெடுத்துவிடும்.

குலுங்காமல் - நாணமில்லாமல்

மானங் கெடுமாறு ஒரு சொல்லைச் சொன்னால் உடனே தலை தாழும்; மனம் நடுங்கும்; கால்கைகள் உதறும்; இது தாங்கிக் கொள்ள முடியாமல், இப்படியாகி விட்டதே என்னும் மானவுணர்வால் ஏற்படும் நிலை. இன்னும் சிலர்க்கு இத்தகு மானக்கேடாம் நிலை உண்டாகும்போது தாங்கிக் கொள்ள மாட்டாத சீற்றம் உண்டாம். என்ன செய்யப் போகிறோம் என்பதைத் தானும் அறியாமல் ஏதேதோ செய்துவிடுவர். இவ்விரு நிலைகளிலும் உடல் குலுங்கும். மானங்கெடுக்கும் போதும் குலுங்காமல் ஒருவர் இருந்தால் 'வெட்கங் கெட்டவன்’ எனப்பழிப்பர். “எவ்வளவு பேசினேன்; குலுங்காமல் இருக்கிறான். மானம் வெட்கம் இருந்தால் அப்படி இருப்பானா?” என்பர். ஆதலால் குலுங்குதலுக்கு நாணுதல் பொருள் உண்மை விளங்கும். குழைதல் - அன்புளதுபோல் நடித்தல்

'சோறு குழைதல்’ ‘மண்குழைத்தல்' என்பவை வழக்கில் உள்ளவை. நாய் வாலைக் குழைத்தல் கண்கூடு. மரத்தில் குழைகள் எழுந்தும் வீழ்ந்தும் பிரிந்தும் சேர்ந்தும் ஆடும். அவ்வாறு கூத்து ஆடுதல் குழைந்தாடுதல் எனப்படும்.