உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 1.pdf/87

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

70

இளங்குமரனார் தமிழ்வளம் – 1 1

கையாள் ஏவலன் அல்லன். அவன் ஏவிச் செய்பவன், முறையான பணியாளன், இவன் சூழ்ச்சியாளனுக்கும் வன்படி யாளனுக்கும் துணையாக நிற்பவன். எச்சிறு செயலும். எத்தீச் செயலும் உடன்படும் உள்ளத்தனே இக் கையாளனாம். கையோங்குதல் - வெற்றி, செல்வம் ஆகியவை மிகுதல்

ரு

கை என்பது பக்கம் என்னும் பொருளும் தருவது. இரு பக்கத்தார் விளையாட்டு, போர், பொருளீட்டல் முதலிய வற்றில் ஈடுபடுங்கால் அந்தக் கையிலும் இந்தக்கை ஓங்கிவிட்டது என்பது வெற்றி முகத்தைக் குறிப்பதாம், ஒருவன் செல்வப் பெருக்கு அடைந்தால் அவன்கை ஓங்கிவிட்டதாகக் கூறுவதும் வழக்கு. ஓங்குதல் - தூக்குதல். அப்பொருளில் இருந்து ஆட்டம், போர், பொருள் முதலியவற்றின் வெற்றிக்கும் உயர்ச்சிக்கும் மாகச் சொல்லப்படுவதால் வழக்குச் சொல்லாயிற்றாம்.

கொட்டுதல் - வசைமொழிதல், கொடுத்தல்,

கொட்டுதல் என்பது ஒரு பொருளை ஒழுக விடல், சிதற விடல் என்னும் பொருளில் வருவது. தேள் கொட்டுதல் என்பதும் நச்சைக் கொட்டுவதாலும், மத்தளம் கொட்டுவது போல கொட்டுவதாலும் பெற்ற பெயராம்.

ஒழுக

மழைக் கொட்டு கொட்டு என்று கொட்டியது என்பது ழுக விடுதல் அல்லது பொழிதலைக் குறித்தது. அதுபோல் வசைமொழிதலையும் வாரி வழங்குதலையும் கொட்டுதல் என்பது குறிக்கும். "கொட்டாதே கொட்டி விட்டால் அள்ள முடியாது” என்பது கூறிய வசை மாறாது என்பதைக் குறிப்ப தாம். அள்ளிக் கொட்டி விட்டான் ; அவனல்லனோ வள்ளல்" என்பது கொடை.

கொடித் தடுக்கல் - பாம்புதீண்டல்.

பாம்பைக்

கொடி என்பது கொடிபோல் சுருண்ட குறித்தது. பாம்பு தீண்டியது என்று சொல்லவும் கூடாது என்னும் கருத்தால் அதனைக் கொடித் தடுக்கியது என்பது நாட்டுப்புற வழக்காகும்.

பாம்பு நெளிந்து செல்வதும், கொடிபோல் சுருண்டு கிடப் பதும் கொடியென உவமைப்படுத்தத் தூண்டியதாம். கொடு, கொடுக்கு என்பன வளைவு என்னும் பொருள் தருவன என் பதையும் கருதுக.