உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 1.pdf/88

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வழக்குச் சொல் அகராதி

71

கொடித் தடுக்கியது' என்பதும் மங்கல வழக்காகக் கருதப் படுகிறது. கொடித் தடுக்கியவர்க்கு ‘மஞ்சள் நீர்’ (தீர்த்தம்) மந்திரித்துத் தருவார் வழிவழியாக உளர்.

கொடுத்து வைத்தல் எதிர்பாராத வாய்ப்புப் பெறுதல்

-

முடி

அரும்பாடு படும் சிலர் எதிர்பார்த்ததை அடை யாமல் தவிப்பர். ஆனால் சிலர் சிலவாய்ப்புகளால் எளிமை யாக அதனை வரப்பெற்று விடுவர். அத்தகையரைக் ‘கொடுத்து வைத்தவர்’ என்பது பெறமுடியாதவர் பேசும் உரை. கொடுக்க மாட்டாதவனும் சிலவேளைகளில் கொடுத்து விடுவான், தகுதி யில்லாதவனுக்கும் சில வேளைகளில் எதிர்பார்த்தது கிடைத்து விடும். அத்தகையவனும் கொடுத்து வைத்தவன் எனப்படுவான். முன்னமே கொடுத்து வைத்திருக்கிறான். இப்பொழுது மீளப் பெறுகிறான் என்பது பொருளாம். "பெறுவான் தவம்” என்னும் திருக்குறள் குறிப்பு நோக்கத் தக்கதாம். அவன் தவக்கோலமே பிறரைக் கொடுக்க வைத்தது என்பதாம்.

கொடைமானம் - பழித்தல்

கொடையும் மானமும் நற்பொருள் தரும் சொற்களே எனினும் சில இடங்களில், இவ்விரண்டையும் சேர்த்துச் சொன் னால் வசைப் பொருளாக வருதலுண்டாம்.

அவள் கொடுத்த கொடைமானத்தை அள்ளி முடியாது” என்பதில் கொடை மானம் வசவாகின்றது.

கொடைப் பெருமையுடை டயது, நேர் எதிரிடைப் பொருளில் வழங்குகின்றது. தப்பு இல்லாதவன் என்னும் பொருளில் ‘தப்பிலி’ வழங்குகின்றது. அது தப்புச் செய்பவரைக் குறித்து நிற்றல் போன்ற வழக்கு இது.

கொண்டைபோடுதல் - நாகரிகமின்மை.

மகளிர் கொண்டைபோடுதல் நம் நாட்டில் கண்கூடு. முன்னர் ஆடவரும் கொண்டை போட்டனர். கல்வியறிவு பெற்ற வரும், நகர நாகரிகம் வாய்ந்தவரும் கொண்டைபோடுவதை நாட்டுப்புறத்தாரின் நாகரிக மில்லாச் செயலாகக்கருதினர். அதனால், எவராவது ஏதாவது இ டக்காகச் சொன்னாலும், குறைத்து மதிப்பிட்டாலும் ‘கொண்டை போட்ட ஆளைப் பார்த்துக்கொள்' என்று தலையைத் தட்டிக் காட்டுவர். இவ் வழக்கால், கொண்டை போடுதல் என்பது அறியாமை, நாகரிக மின்மை என அவர்கள் கருதும் பொருள் தருவதாயிற்றாம்.