உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 1.pdf/95

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

78

இளங்குமரனார் தமிழ்வளம்

1

வள்ளுவர். குடும்பத்தில் கணவன் கருத்துக்கு ஒப்பி நடக்கும் மனைவி வாய்த்துவிட்டால் அவளைச் சாடிக்கு ஏற்ற மூடி எனச் சொல்வது வழக்கமாம்.

நல்ல கருத்தா அல்ல கருத்தா என்பது பற்றியதன்று செய்தி. இருவர் கருத்தும் ஒத்த கருத்து என்பதே குறிப்பு. பிறர்க்கு அவர்கள் செயற்பாடு எத்தகைத்தானாலும் அவர்களுக்குள் ஒரு பிணைப்பு இருத்தல் அவர்கள் வாழ்வுக்குத் தக்க ஒன்றுதானே. சாப்பாடு போடல் - திருமணம் செய்தல்

நண்பர்களுக்குள்ளும் அன்பர்களுக்குள்ளும் திருமண அகவையுடையவர்களெனின், “என்ன எப்பொழுது சாப்பாடு போட எண்ணம்?” போகிற போக்கைப் பார்த்தால் சாப்பாடு போடும் எண்ணமே இல்லையா?” என வினவும் சாப்பாடு திருமணப் பொருட்டதாம்.

திருமணம் என்றாலே பலவகைக் கறிகள், கண்ணமுது, ‘பாயசம்’, அப்பளம் வடையுடன் சாப்பாட்டுச் சிறப்பே பெருஞ் சிறப்பாகப் பேசப்படுவதாகலின் சாப்பாடே திருமணப் பொருள் தருவதாயிற்று. தாலிகட்டு முடிந்தால் இலை முன்னர்தான் பலரைப் பார்க்கலாம்! அவ்வளவு பாடு, சாப்பாடு! வாழ்த் தென்ன, வரவேற்பென்ன, ஓடியாபோகும்!

சாய்தல் - படுத்தல், உறங்குதல், இறத்தல்

மரம் சாய்தல், தூண் சாய்தல், சுவர் சாய்தல் என்பன சாய்தலாம். இவ்வாறே மாந்தர் படுப்பதும் ‘சாய்தல்' எனப் படுவதாயிற்று. சிலர், “கொஞ்சம் பொழுதேனும் கட்டையைச் சாய்த்தால் தான் தாங்கும்; உடலுக்கு ஒரே அலுப்பு” என்பர்.

L

திண்டு முதலியவற்றில் சாய்ந்திருத்தலும் சாய்தலே. முழு துடலும் கிடத்திப் படுத்தலும் சாய்தலே. "பறவைகளுக்குக் கூடுண்டு; விலங்குகளுக்குக் குகையுண்டு; மனித குமரனுக்கோ தலைசாய்க்க இடமில்லை" என்பது கிறித்தவ மறைக் குறிப்பு.

66

னி ஆள் சாய்ந்து விட்டது து” என்பதில், இறப்புப் பொருளும் இடம் பெறும். "படு கட்டை சாய்ந்து விட்டது ம் என்பர்.

சிக்கெடுத்தாற் போலிருத்தல் - தொல்லை தீர்தல்

து

தலையை நீராட்டிப் பேணுதல், எண்ணெய் தேய்த்தல், தலைவாருதல் இல்லாக்கால் சிக்கு உண்டாம். கற்றை கற்றை