உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 1.pdf/96

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வழக்குச் சொல் அகராதி

79

யாய்ச் சடையும் உண்டாம். நூற்கண்டு கயிறு ஆகியவை நீளச் செல்லும்போது சிக்கல் பட்டு விடுவதும் உண்டாம். தொண்டை, பல்லிடுக்கு ஆகியவற்றில் ஏதாவது பொருள் சிக்கி இடர் தருவதும் உண்மையே. இச் சிக்கலுள் எவையாயினும் எடுக்கப் பட்டால் அன்றி ஒழுங்காவதில்லை. நலம் செய்வதில்லை. ச் சிக்கல்கள் போலவே வாழ்வியற் சிக்கலும் ஏற்படுவது மிகுதி. அச்சிக்கல்களுக்கு ஆட்பட்டு அல்லல் பட்டவர்கள் அவை தீர்ந்த மகிழ்வில் “இப்பொழுதுதான் சிக்கெடுத்தாற் போலுள்ளது என்பர். சிக்கல் - தொல்லை, சங்கடம். சிக்கலை ஆக்குவதே சிலர் வேலை. அவரைச் சிக்கல் சிங்கார வேலர் என்று உள் நகைப்பர். சிங்கி தட்டல் (சாலராப்போடல்) - ஒத்துப்பேசுதல்.

L

சிங்கி ஒரே சீராக ஒரே போக்காக ஒலித்துக் கொண்டிருப்பதாம். இதனை இசைக்க, மற்றை மற்றைக் கருவியிசைஞர்க்கு வேண்டுவது போல் பெரிய நுட்பமான தேர்ச்சி வேண்டுவதில்லை. அவர்கள் டாமல் தாளம் போடுவதே கடமையாக உள்ளது. அவர்களுக்கெனத் தனிப்பட இசைப்பும் இல்லை. பிறர்க்கு ஒத்துப் பின் தாளம் போடுவதே வேலையாதலால், தமக்கென ரு கருத்து இல்லாது, எவர் என்ன சொன்னாலும் அதை அப்படியே ஏற்றுக் கொண்டு ஒத்துப் பேசுவதைச் 'சிங்கிப் போடல்' என்பதும் இது. 'ஒத்தூதல்' என்பதும் வழக்கே.

சிங்கியடித்தல் - வறுமைப்படல்

வயிற்றுப் பாட்டுக்கு வகையில்லாதவர்கள் என்பதைக் குறிப்பது சிங்கியடித்தலாம்.

இசை நிகழ்ச்சி நடந்தால் அதில் பாடகர், குழலர், யாழர், மத்தளர், ஆகியவர்க்கு உரிய மதிப்பும் பொருள் வருவாயும் சிங்கியடிப்பவர்க்கு வருவதில்லை. ஆதலால் அவர் வறுமையி லேயே தவிப்பார். அதனைக் கொண்டே வறுமைப்படுதலைச் சிங்கியடித்தலாகச் சொல்லும் வழக்கம் ஏற்பட்டது.

அவர் சாப்பாட்டுக்குச் சிங்கியடிக்கிறார் என்பது வழக்கு.

சிண்டு முடிதல் - (இருவருக்குள்) பகையாக்கல்

சிண்டு, சிறுகுடுமி. ஒருவர் குடுமியை முடிவதில்லை இது. ஒருவர் குடுமியை மற்றொருவர் குடுமியொடு முடிந்து போடு வதைக் குறிப்பதாகவுள்ளது. இருவர் சிண்டையும் முடிந்தால் முட்டாமல் மோதாமல் முடியாதே! சிண்டு முடிதல் என்பது சிக்கலையுண்டாக்கிப் பகை ஏற்படுத்துவதாக அமைகின்றது.