உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 10.pdf/104

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

காக்கை பாடினியம்

அணிகொண் டலர்ந்த வனமாலை சூடி அகிலாவி குஞ்சி கமழ

மணிகுண் டலங்கள் இருபாலும் வந்து

வரையாக மீது திவளத்

துணிகொண் டிலங்கு சுடர்வேலி னோடு

வருவானி தென்கொல் துணிவே”

இஃது எழுசீர்க் கழிநெடிலடியான் வந்த செய்யுள்.

87

சூளாமணி 1327.

(எண்சீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்)

“மூவடிவி னாலிரண்டு சூழ்சுடரும் நாண

முழுதுலகு மூடியெழின் முளைவயிரம் நாற்றித் தூவடிவி னாலிலங்கு வெண்குடையின் நீழல்

சுடரோய்நின் அடிபோற்றிச் சொல்லுவதொன் றுண்டால் ; சேவடிகள் தாமரையின் சேயிதழ்கள் தீண்டச்

சிவந்தனவோ ? சேவடியின் செங்கதிர்கள் பாயப் பூவடிவு கொண்டனவோ பொங்கொளிகள் சூழ்ந்து? புலங்கொள்ளா வாலெமக்கெம் புண்ணியர்தம் கோவே'

இஃது எண்சீர்க் கழிநெடிலடியான் வந்த செய்யுள்.

-சூளாமணி 1904.

எண்சீரின் மிக்கு வரும் கழிநெடிலடியை இவர்க்கு வழி நூல் செய்தார் கூறினாராக, இவர் கூறினர் இலரோ எனின் 'முறை பிறழ' இந் நூற்பா அமைத்ததால் அன்றி வெளிப்படவும் உரைத்தார். அதனை வெளிப்படக் கூறுவது அன்றே வரும் நூற்பா.

எண் சீரின் மிக்குவரும் கழிநெடிலடிகள்

24. இரண்டு முதலா எட்டீ றாகத்

திரண்ட சீரான் அடிமுடி வுடைய ; 'இறந்தன வந்து நிறைந்தடி முடியினும் சிறந்த அல்ல செய்யு ளுள்ளே

(பா.வே.) 1. இறந்து வரினும். அடிமுடி வுடைய.

-யா. வி. 24 மேற்.

-யா. கா. 13 மேற்.