உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 10.pdf/105

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

88

இளங்குமரனார் தமிழ் வளம் – 10

இந் நூற்பா என்ன கூறிற்றோ எனின் எண்சீரின் மிக்கும் கழிநெடிலடி வரும் எனவும், அஃது அத்துணைச் சிறப்பின்று எனவும் கூறிற்று.

-

இ ள்.) இரண்டுசீர் முதலாக எட்டுச்சீர் அளவாக அடி அமைந்து வருதலை நெறியாக உடையன. அவ்வெட்டுச் சீரினும் மிக்க அடி செய்யுளுள் வருமாயினும் அத்துணைச் சிறப்புடையன அல்ல என்றவாறு.

இரண்டு முதலா எட்டீறாக' எனக் கூறினார், கூறியது கூறலோ' எனின், அற்றன்று; அறுசீர் அளவே சிறப்புடைத்து என்றும், எண்சீர்காறும் வருவன அதனளவு சிறப்புடையன ன அல்ல என்றும், எண்சீரின் மிக்கு வருவன அவற்றளவினும் சிறப்புடையன அல்ல என்றும் முத்திறக் கூறுபாட்டான் உரைத்தல் வேண்டிக் கூறினார் ஆகலின் குற்றமின்றாம். என்னை? “கூறியது கூறல் குற்றம் இல்லை வேறொரு பொருளை விளக்கு மாயின்

என்றார் ஆகலின்.

66

-யா. வி. 57 மேற்.

-யா. கா. 23 மேற்.

(ஒன்பதின்சீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்)

"இடங்கை வெஞ்சிலை வலங்கை வாளியின்

எதிர்ந்த தாரையை இலங்கும் ஆழியின் விலங்கியோள்

முடங்கு வாலுளை மடங்கல் மீமிசை

முனிந்து சென்றுடன் முரண்ட ராசனை முருக்கியோள் வடங்கொள் மென்முலை நுடங்கு நுண்ணிடை

மடந்தை சுந்தரி வனங்கொள் பூண்முலை மகிழ்ந்தகோன் தடங்கொள் தாமரை இடங்கொள் சேவடி

தலைக்கு வைப்பவர் தமக்கு வெந்துயர் தவிர்க்குமே'

-யா. வி. 25 மேற். -யா. கா. 13, 29 மேற்.

இஃது ஒன்பதின்சீர்க் கழிநெடிலடியான் வந்த செய்யுள்.

(பதின்சீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்)

"கொங்கு தங்கு கோதை ஓதி மாத ரோடு

கூடி நீடும் ஓடை நெற்றி