உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 10.pdf/125

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

108

1

இளங்குமரனார் தமிழ் வளம் – 10

(குறள் வெண்பா)

“தக்கார் தகவிலர் என்ப தவரவர்

மக்களாற் காணப் படும்"

- திருக். 114.

என்றும் வள்ளுவப் பாக்களை மாற்றி யமைத்துச் 'சீரிய தொடையமைதி காணீர்’ என்று தமக்குத் தாமே செயற்கருஞ் செயலெனச் செம்மாந்தார் போலவும், பொருட்பொருத்தம் சிறிதும் தழுவாத போலி நடை காட்டித் 'தொடையிது காணீர்’, ‘பாவிது காணீர்' எனப் போன போக்கிற் பாடுவார் போலவும், உளராயின் அவர்க்கு அறிவுறுத்தி மொழிநலம் காத்தற்கு இது கூறவேண்டும் என்பது.

இனி, எழுத்தால் தொடையாவனவும், சொல்லால் தொடையாவனவும், பொருளால் தொடையாவனவும் உள

ஆகலின் அவற்றையெல்லாம் தழுவிக்கொள்ள வேண்டி வாறு கூறினார் என்றுமாம்.

வ்

எழுத்தால் தொடையாவன மோனை, எதுகை, அளபெடை என்பன ; எழுத்தாலும் சொல்லாலும் தொடையாவது இயைபு என்பது; பொருளால் தொடையாவது முரண் என்பது.இவற்றின் இலக்கணமும் எடுத்துக் காட்டும் முன்னே கூறப் பெறும்.

தொடுக்கப் பெறுவது தொடை என்பது காரணக்குறி. பூத்தொடை போல்வது இப்பாத் தொடை என்க. இனி இடுப் னி பொடும் இணைக்கப்பெற்ற தொடை என்பதுவும், ஏவும் இடத் தொடும் தைக்கும் இடத்தொடும் தொடுக்கப்பெறும் அம்புத் தொடை என்பதுவும் அன்னவேயாம்.

'தொடை எனப் படுவது' என்றார் ; அவை யாவையோ னின், மோனை எதுகை முரண் இயைபு அளபெடை என்னும் ஐந்துமாம். ஐந்து தொடையும் எங்ஙனம் பாடற்கண் வரும் எனின், அடி, இணை, பொழிப்பு, ஒருஉ, கூழை, கீழ்க்கதுவாய், மேற் கதுவாய், முற்று என இவற்றொடு பொருந்தி எண்வகையாக வரும் என்க. என்னை?

“தொடையே அடியிரண் டியையத் தோன்றும்"

6 எனவும்,

“மோனை எதுகை முரணியை பளபெடை

பாதம் இணையே பொழிப்போ டொரூஉத்தொடை

1. எச்சத்தாற்.

-யா. வி. 33.