காக்கை பாடினியம்
கூழை கதுவாய் மிசையதூஉம் கீழதூஉம் சீரிய முற்றொடு சிவணுமார் அவையே'
எனவும் கூறினார் ஆகலின்.
وو
இனித் தொடைகளைக் கூட்டி உரைக்குமாறு : :
109
-யா. வி. 34.
அடிமோனை, இணைமோனை, பொழிப்புமானை, ஒரூஉ மேற்கதுவாய்மோனை, கீழ்க்
மோனை,
கூழைமோனை,
கதுவாய்மோனை, முற்றுமோனை.
-மோனையுடன் எட்டையும் கூட்டி வழங்கியவாறு.
அடிஎதுகை, இணையெதுகை, பொழிப்புஎதுகை, ஒரூஉ எதுகை, கூழைஎதுகை, மேற்கதுவாய்எதுகை, கீழ்க்கதுவாய் எதுகை, முற்றுஎதுகை
-எதுகையுடன் எட்டையும் கூட்டி வழங்கியவாறு.
அடிமுரண்,
இணைமுரண், பொழிப்புமுரண், ஒரூஉ முரண், கூழைமுரண், மேற்கதுவாய்முரண், கீழக்கதுவாய்முரண், முற்று முரண்
-முரணுடன் எட்டையும் கூட்டி வழங்கியவாறு.
அடிஇயைபு, இணைஇயைபு, பொழிப்புஇயைபு, ஒரூஉ இயைபு, கூழைஇயைபு, மேற்கதுவாய்இயைபு, கீழ்க்கதுவாய் இயைபு, முற்றுஇயைபு.
இயைபுடன் எட்டையும் கூட்டி வழங்கியவாறு.
அடிஅளபெடை, இணைஅளபெடை, பொழிப்புஅள பெடை, ஒரூஉஅளபெடை, கூழைஅளபெடை, கீழ்க்கதுவாய் அளபெடை, மேற்கதுவாய்அளபெடை, முற்றுஅளபெடை
-அளபெடையுடன் எட்டையும் கூட்டி வழங்கியவாறு.
மோனை முதலியவை, அடிமுதற்சீர் முதலாக எண்ணப் பெறுவன. இயைபு ஒன்றும் இறுவாய் முதலாக எண்ணப் பெறும். என்னெனின் இறுதி ஒன்றி வருதல் இயைபு ஆகலானும், இலக்கியம் கண்டதற்கு இலக்கணம் இயம்பல் நெறி ஆகலானும் என்க.
இவற்றுக்கு எடுத்துக் காட்டுத் தத்தம் இலக்கணம் உணர்த்துமிடத்துக் கூறுதும்.