120
இளங்குமரனார் தமிழ் வளம் – 10
(கலித்துறை)
_
“காய்மாண்ட தெங்கின் பழம்வீழக் கமுகின் எற்றிப் பூமாண்ட தீந்தேன் தொடைகீறி வருக்கை போழ்ந்து தேமாங் கனிசிதறி வாழைப் பழங்கள் சிந்தும்
ஏமாங் கதமென் றிசையால் திசைபோய துண்டே”
இது யகர ஒற்று இடைவந்த ஆசிடை எதுகை.
66
(கலி விருத்தம்)
"மாக்கொடி மாணையு மவ்வற் பந்தரும் கார்க்கொடி முல்லையும் கலந்து மல்லிகைப் பூக்கொடிப் பொதும்பரும் பொன்னின் ஞாழலும் தூக்கொடி கமழ்ந்துதான் துறக்கம் ஒத்ததே
இது ரகர ஒற்று இடைவந்த ஆசிடை எதுகை.
(குறள்வெண் செந்துறை)
-சீவக. 31.
சூளாமணி 35.
66
"ஆர்கலி உலகத்து மக்கட் கெல்லாம் ஓதலிற் சிறந்தன் றொழுக்க முடைமை
99
என்பதுவும் அது.
66
(நேரிசை வெண்பா)
"ஆவே றுருவின ஆயினும் ஆபயந்த
பால்வே றுருவின அல்லவாம்-பால்போல் ஒருதன்மைத் தாகும் அறநெறி ; ஆபோல் உருவு பலகொளல் ஈங்கு’
இது லகர ஒற்று இடைவந்த ஆசிடை எதுகை. து
(நேரிசை வெண்பா)
“அந்தரத் துள்ளே அகங்கை புறங்கையாம்
மந்தரமே போலும் மனைவாழ்க்கை-மந்தரத்துள்
-முதுமொழிக். 1.
-நாலடி. 118.