காக்கை பாடினியம்
வாழ்கின்றேம் என்று மகிழன்மின் வாணாளும் போகின்ற பூளையே போன்று”
இது ழகர ஒற்று இடைவந்த ஆசிடை எதுகை.
(கலி விருத்தம்)
“சாந்துமெழு கிட்டதட மாமணி நிலத்தைச்
சேர்ந்துதிகழ் பொன்னியல் சலாகைநுதி தீட்டிப் பேர்ந்துமொரு கால்விரையி னான்மெழுகு வித்தான் ஆய்ந்தமறை ஓதியத னாரிட மறிந்தான்.’
99
121
-யா. வி. 37 மேற்.
-யா. கா. 41. மேற்.
-சூளாமணி 1095
து ரகர யகர ஒற்றுக்கள் இடைவந்த ஆசிடை எதுகை.
(நேரிசை வெண்பா)
"நேர்த்து நிகரல்லார் நீரல்ல சொல்லியக்கால்
வேர்த்து வெகுளார் விழுமியோர்-ஓர்த்ததனை
உள்ளத்தால் உள்ளி உரைத்துராய் ஊர்கேட்பத் துள்ளித்தூண் முட்டுமாம் கீழ்"
இவ் வெண்பாவில் வந்த ரகர ஒற்ற ஆசிடை எதுகையாமோ எனின் அன்று ; ஆசிடை என்பது மோனை எழுத்திற்கும் எதுகை எழுத்திற்கும் இடையே வருவது. இஃது எதுகையாகவே வந்த எழுத்து ஆகலின் அன்ன தன்று என்க. பிறவும் இவ்வாறே கொள்க.
முரண் தொடை
35. மொழியினும் பொருளினும் முரணத் தொடுப்பின் இரணத் தொடையென் றெய்தும் பெயரே.
-யா. கா. 40 மேற்.
-யா. வி. 38.
இந் நூற்பா என்ன கூறிற்றோ எனின் நிறுத்த முறையே முரண் தொடை இலக்கணம் கூறிற்று.
-
(இ ள்.) அடிதோறும் மொழியாலும் பொருளாலும் முரண்படுமாறு தொடுக்கப் படின் அது முரண்தொடை என் னும் பெயர் பெறும் என்றவாறு.