உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 10.pdf/139

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

122

இளங்குமரனார் தமிழ் வளம் - 10

இரணத்தொடை யாவது பகைத்தொடை ; பகைத் தொடை எனினும் முரண்தொடை எனினும் ஒக்கும்.

மொழியினும் பொருளினும் என்றார் மொழியால் முரண் தாடையும், பொருளால் முரண்தொடையும், மொழியும் பொருளும் முரண்தொடையும் எனக் கொள்க. மொழியாவது சால்.

“மொழியினும் பொருளினும் முரணுதல் முரணே”

என்று ஆசிரியர் தொல்காப்பியனார் இவ்வாறே இலக்கணம் கூறினார். இதனை ஆசிரிய மொழியாக மேற்கொண்டு யாப் பருங்கலம் உடையார் கூறினார். முரண்தொடையை அணியின் பாற்படுத்து 'விரோத அணி' என்பார் அலங்கார முடையார்.

இனி மொழியினும் பொருளினும் முரணுதல் என்பதைச் சொல்லும் சொல்லும் முரணுதல், பொருளும் பொருளும் முரணுதல், சொல்லும் பொருளும் சொல்லொடு முரணுதல், சொல்லும் பொருளும் சொல்லொடும் பொருளொடும் முர ணுதல் என ஐந்தாக்கியும் கூறுவர் (தொல். பேரா.)

(எ - டு.)

(நேரிசை ஆசிரியப்பா)

“செந்தொடைப் பகழி வாங்கிச் சினஞ்சிறந்து கருங்கைக் கானவன் களிற்றுநிறத் தழுத்தலிற் பசும்புண் வார்ந்த அசும்புடைக் குருதியொடு வெள்விளி பயிற்றும் நாடன்

உழையன் ஆகவும் விழையுமென் நெஞ்சே

-தொல். செய். 95 பேரா. மேற். -யா. வி. 38 மேற்.

இது சொல்லும் சொல்லும் முரணியது. செம்மை, கருமை, பசுமை, வெண்மை, என்பவற்றில் வண்ணம் இல்லை; நேர்மை, வன்மை, ஆறாமை, அறிவின்மை என்னும் பொருள் தரும் சொற்களே நின்றன.

(நேரிசை ஆசிரியப்பா)

"தீமேய் திறல்வரை நுழைஇப் பரிமெலிந்து நீர்நசை பெறாஅ நெடுநல் யானை

வானதிர் தழங்குகுரல் மடங்கல் ஆனாது