காக்கை பாடினியம்
இருசீர் இடைவிடில் ஒரூஉ
எனவும் இயைத்துப் பொருள் கொள்க.
6
133
ஒருசீர் இடை விடுதல் என்றது ஒன்று கூறி ஒன்று டுவதை. இருசீர் இடைவிடுதல் என்றது ஒன்று கூறி இடை இடையே இருசீர் விடுவதை. ஆக முதற்சீர் மூன்றாம் சீரும் மோனை முதலியன பெற்று வருவது பொழிப்பு எனவும், முதற்சீரும் நான்காம்சீரும் மோனை முதலியன பெற்று வருவது ஒரூஉ எனவும் பெற்றாம்.
6
இதனைப் பிறரும்,
“முதலொடு மூன்றாஞ் சீர்த்தொடை பொழிப்பே”
எனவும்,
“சீரிரண் டிடைவிடத் தொடுப்ப தொரூஉத் தொடை'
99
எனவும் தனித்தனி விளக்கிக் கூறினார் ஆதலறிக.
(எ - டு.)
பொழிப்பு :
(குறள் வெண்பா)
“மலர்மிசை ஏகினான் மாணடி சேர்ந்தார்
நிலமிசை நீடுவாழ் வார்”
-யா. வி. 43.
-யா. வி. 44.
என்றும்,
(நேரிசை ஆசிரியப்பா)
“கணங்கொள் வண்டினம் கவர்வன மொய்ப்பக்
கழிசேர் அடைகரைக் கதிர்வாய் திறந்த கண்போல் நெய்தல் கமழும் ஆங்கண்
கலிமாப் பூண்ட கடுந்தேர்
கவ்வை செய்தன்றாற் கங்குல் வந்தே”
என்றும் பொழிப்பு மோனை வந்தது.
-திருக். 3.
-யா. வி. 43 மேற்.