136
இளங்குமரனார் தமிழ் வளம் – 10
ஒரூஉ
(குறள் வெண்பா)
“தெருளாதான் மெய்ப்பொருள் கண்டற்றால் தேரின் அருளாதான் செய்யும் அறம்
என்றும்,
(நேரிசை ஆசிரியப்பா)
“புயல்வீற் றிருந்த காமர் புறவிற்
புல்லார் இனநிரை ஏறொடு புகலப்
புன்கண் மாலை உலகுகண் புதைப்பப்
புரிவளைப் பணைத்தோட் குறுமகள்
புலம்புகொண் டனளாம் நம்வயிற் புலந்தே"
என்றும் ஒரூஉ மோனை வந்தது.
(குறள் வெண்பா)
“ஒழுக்கத்து நீத்தார் பெருமை விழுப்பத்து வேண்டும் பனுவல் துணிவு’
என்றும்,
99
(நேரிசை ஆசிரியப்பா)
“பரியல் யாவதும் பைந்தொடி அரிவை பொரியரை மராஅத்து வாலிணர்ச் சுரிமலர் எரியிணர்க் காந்தளோ டெல்லுற விரியும் வரிவண் டார்க்கும் நாடன்
பிரியான் ஆதல் பேணின்மற் றரிதே”
என்றும் ஒரூஉ எதுகை வந்தது.
(குறள் வெண்பா)
"புறந்தூய்மை நீரான் அமையும் அகந்தூய்மை வாய்மையாற் காணப் படும்
என்றும்,
-திருக். 249.
-யா. வி. 44 மேற்.
-திருக். 21.
-யா. வி. 44 மேற்.
-திருக். 298.