144
இளங்குமரனார் தமிழ் வளம் – 10
பிறரெல்லாம் கூழை, கதுவாய், முற்று என்று எண்ணி ணாராக இந் நூற்பாவுடையார் இவ்வாறு எண்ணிய தென்னை எனின், கதுவாய் இரண்டும் முறையே நிரம்பாமல் முதலயற் சீரோ ஈற்றயற் சீரோ குறைந்தன ; கூழையோ, முறையே மூன்று சீரும் நிரம்பியது. ஆகலின் அதற்கப் பின்னர் நான்காம் சீரும் நிரம்பிய முற்றைக் கூறுதல் தகவுடைத்து என்க.
இவற்றைப் பிறகும்,
ரு
"மூவொரு சீரும் முதல்வரத் தொடுப்பது கூழை என்மனார் குறியுணர்ந் தோரே'
என்றும்,
“சீர்தொறும் தொடுப்பது முற்றெனப் படுமே”
-யா. வி. 45.
என்றும் கூறினார்.
(எ-டு)
கூழைத்தொடை
(குறள் வெண்பா)
என்றும்,
“பற்றுக பற்றற்றான் பற்றினை அப்பற்றைப் பற்றுக பற்று விடற்கு
(நேரிசை வெண்பா)
“அருவி அரற்றும் அணிதிகழ் சிலம்பின்
அரக்கின் அன்ன அவிழ்மலர்க் காந்தள்
அஞ்சிறை அணிவண் டரற்றும் நாடன்
அவ்வளை அமைத்தோள் அழிய
அகன்றனன் அல்லனோ அளியன் எம்மே”
-யா. வி. 48.
- திருக் 350
-யா. வி. 45 மேற்.
என்றும் கூழைமோனை வந்தது. ‘பற்றுக பற்றற்றான்' என்னும் குறள் வெண்பா கூழை எதுகைக்கும் பொருந்தி நிற்றல் அறிக.