உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 10.pdf/170

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

காக்கை பாடினியம்

153

இந் நூற்பா என்ன கூறிற்றோ எனின் நிறுத்த முறையே செந்தொடையாவது இஃதெனக் கூறிற்று.

இ-ள்.) முரண் தொடை என்னும் ஒன்றும் அல்லாத மோனை முதலிய தொடைகளுள் வேறுபட்டு வரும் நிலைமையினது செந்தொடை எனப்படும் என்றவாறு.

செம்பகை யாவது நேர்முரண் ; பகைத்தொடை. இரணத் தொடை என்பதும் அதன் பெயர் எனக் கூறினாம்.

செம்பகை ஒன்றனை விலக்கிய தென்னை எனின், அது முரண்தொடை என்று ஒரு பெயர் கொண்டு விடும் ஆகலின் விலக்கினார் என்க. ஆகலின், முரண் போலவும் இன்றிப், பிற தொடைகளைப் போலவும் இன்றி எவ்வகையானும் ஒன்றி வாராத தொடை செந்தொடை எனறார் என்று கொள்க.

சம்மை அமையாத

அமையாத தொடையைச்

என்றது, மங்கல வழக்கெனக் கருதுக.

(நேரிசை ஆசிரியப்பா)

சந்தொடை

‘பூத்த வேங்கை வியன்சினை ஏறி

மயிலினம் அகவும் நாடன்

நன்னுதற் கொடிச்சி மனத்தகத் தோனே"

-தமிழ்நெறி விளக்கம் 17.

இஃதகவற்பாவின் அமைதி பெற்று வந்ததை அன்றி, மோனை முதலிய தொடைகளுள் எதுவும் பெற்று வாராமை கண்டறிக.

இதன் இலக்கணத்தைச்,

“சொல்லிய தெடையொடும் வேறுபட் டியலின் சொல்லியற் புலவரது செந்தொடை என்ப”

என்று ஆசிரியர் தொல்காப்பியனாரும், “ஒன்றிய தொடையொடும் விகற்பம் தம்மொடும் ஒன்றாது கிடப்பது செந்தொடை தானே”

என்று சிறுகாக்கை பாடினியாரும் கூறினர்.

-தொல். செய். 96.

-யா. வி. 50 மேற்.

ஒரு செய்யுளில் தொடையும் அடியும் பல விரவிவரின் அவற்றை வழங்குமாறு