154
இளங்குமரனார் தமிழ் வளம் – 10
ல
45. தொடைஅடி யுட்பல வந்தால் எழுவாய்
உடையத னாற்பெயர் ஒட்டப் படுமே.
-யா. வி. 53 மேற்.
இந் நூற்பா என்ன கூறிற்றோ எனின் ஒரு செய்யுளில் பல தொடையும் பல அடியும் விரவி வந்தால் அவற்றை வழங்கும் முறை இதுவெனக் கூறிற்று.
ள்.) ஒரு செய்யுளில் பலவகைத் தொடைகளும் பல வகை அடிகளும் வந்தால் அதன் முதற்கண் அமைந்த தொடையாலோ அடியாலோ அதற்குப் பெயரிட்டுக் கூறப்
பெறும் என்றவாறு.
ஒரு செய்யுள் ஒருவகைத் தொடையால் அமைந்திருக்கு மாயின் இன்ன தொடை யெனக் கூறிவிடலாம்; அனால் பல தொடைகள் அதனுள் வரப் பெறுமாயின், அவற்றுள் எப் பெயரிட்டு அச் செய்யுளை வழங்குவது என்னும் ஐயம் எழு மன்றே; அதனை ஒழித்தற்கு இந் நூற்பா கூறப் பெற்றது. இனி ஒன்றற்கு மேற்பட்ட அணிகள் ஒரு பாடற்கண் வருமாயின் கலவை யணி என அணியிய லுடையார் கூறுவர் அன்றே. அவ்வாறே அடி தொடை பலவாக வருவனவற்றிற்குமோர் குறியிட்டு வழங்குவரோ என்பார்க்கு இவ்விதி கூற வேண்டியது இன்றியமையாமை யாயிற்று. இதனை,
“பல்வகைத் தொடையொரு பாவினிற் றொடுப்பின் சொல்லிய முதற்றொடை சொல்லினர் கொளலே
என்று சிறுகாக்கை பாடினியாரும். "தொடைபல தொடுப்பினும் தளைபல விரவினும் முதல்வந் ததனால் மொழிந்திசிற் பெயரே”
என்று அமிதசாகரனாரும் கூறினர்.
66
(நேரிசை ஆசிரியப்பா)
'தாமரை புரையும் காமர் சேவடிப் பவழத் தன்ன மேனித் திகழொளிக் குன்றி யேய்க்கும் உடுக்கைக் குன்றின் நெஞ்சுபக எறிந்த அஞ்சுடர் நெடுவேல் சேவலங் கொடியோன் காப்ப ஏம வைகல் எய்தின்றல் உலகே'
(பொழிப்பெதுகை)
(ஒரூஉ எதுகை)
(ஒரூஉ மோனை)
(பொழிப்புமோனை)
-குறுந். கடவுள்.