உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 10.pdf/184

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

-

காக்கை பாடினியம்

167

ள்.) இரண்டாம் அடியின் இறுதிச் சீர் ஒரூஉத் தாடை பெற்று வேறோர் எதுகை ஆகியும் அவ்வாறு ஆகாமல் ஒரே எதுகையாய் நின்றும், இரண்டும் துண்டாய் இடையே சீருறப்பிளக்கப் பெற்று அடிநான்கு உடையதாய் அமைவது யாதோ அது நேரிசை வெண்பா என்றவாறு.

'முரண்ட எதுகை'யை முற்படக் கூறினார் அதுவே பெரு வரவிற்று ஆகலின்.

'இரண்டு துணியாய்' என்றது இரண்டு குறட்பாக்களாய்த் தனித்தனி அமைந்தது என்பது அறிவித்தற்கு.

துணி'யாவது துண்டு; துணிக்கப் பெற்றது என்னும் காரணப் பொருட்டு.

டைநனி போழ்ந்து' என்றது நடுவே சீருறப் பிளக்கப் பெறுதலை. அஃதாவது வெண்பாவிற்குக் கூறப்பெற்ற ஈறு திறம்பாது முதல் ஒரு குறளாகவும், பின்னொரு குறளாகவும் நிற்றல்.

'நிரந்து அடிநான்கின நேரிசை' என்றது ஈறு திறம்பாது நிற்றலுடன், ஒன்றிரண்டு அசைகளை உடன் பெற்றும் தனிச் சொல் பெற்றும் இடையறாது ஒழுங்குற்று வருவதை. ஆசிடை வெண்பா என்பர்.

ஆசு என்பது பற்றாசு. அஃது, ஒற்றுமைப் படாத இரண்டு உலோகங்களை ஒற்றுமைப் படுத்தற்குத் தூவி ஊதும் ஒருவகைப் பொடி. அதுபோல் முதற் குறள் ஈறும், தனிச் சொல்லும் ஒற்றுமைப்பட்டுத் தழுவி நிற்குமாறு அமைந்த ஒன்றிரண்டு அசைகள் ஆசு எனப் பெற்றன. ஆசு இடையே அமைந்த நேரிசை வண்பா ஆசிடை நேரிசை வெண்பா எனக் காரணக் குறி பெற்ற தென்க.

இனி ஆசிடை எதுகைக்கும் இதற்கும் வேற்றுமை என்னையோ எனின், மோனை எழுத்திற்கும் எதுகை எழுத்திற்கும் இடையே வரும் ய, ர, ல, ழ என்னும் நான்கு எழுத்துக்களும் ழ ஆசிடை எதுகை என்றும், இங்கே வரும் ஆசு இரண்டு சீர்களுக்கு இடையே வரும் ஒன்றிரண்டு அசைகள் என்றும் வேறுபாடு காண்க. ஆசிடை எதுகை, குறித்த எழுத்துக்களின் அளவில் நிற்க, இவ்வாசோ இரண்டு அசைகள் அளவும் மிக்கு நிற்பது என்னும் வேறுபாடும் அறிக.

'நிரந்து' என்பது இடையறாது ஒழுகுதலைக் குறிக்குமோ எனின் குறிக்கும். ‘நிரந்து இலங்கு அருவி’ (228) என்னும் ஐங்குறு நூற்றாலும் இடையறாது வீழ்ந்து விளங்குகின்ற அருவி என்னும் அதன் குறிப்புரையாலும் இப் பொருட்ட தாதல் அறிக.