உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 10.pdf/185

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

168

இளங்குமரனார் தமிழ் வளம் – 10

இனி, இரண்டாம் அடியின் ஈறு ஒரூஉ எய்துதலைக் குறித்தார் எனினும் கதுவாய், முற்றுத் தொடைகளையும் கொள்க. என்னெனின், அவையும் நான்காம் சீர், தொடையியையு பெற்று வரும் ஆகலின்.

(எ -டு.)

(நேரிசை வெண்பா)

“தடமண்டு தாமரையின் தாதா டலவன்

இடமண்டிச் செல்வதனைக் கண்டு-பெடைஞெண்டு பூழிக் கதவடைக்கும் புத்தூரே பொய்கடிந் தூழி நடாயினான் ஊர்

-யா. வி. 60 மேற்.

-யா. கா. 23 மேற்.

ஃது இரண்டு குறள்களாய் நடுவு தனிச் சொல் பெற்று

இஃது

வந்த இருவிகற்ப நேரிசை வெண்பா.

(நேரிசை வெண்பா)

அரிய வரைகீண்டு காட்டுவார் யாரே

பெரிய வரைவயிரம் கொண்டு-தெரியின்

கரிய வரைநிலையார் காய்ந்தாலென் செய்வார்

பெரிய வரைவயிரங் கொண்டு.

-நீதிவெண்பா.

-யா. வி. 60 மேற்.

-யா. கா. 23 மேற்.

ஃது ரண்டு குறள்களாய் நடுவு தனிச் சொல் பெற்று வந்த இருவிகற்ப நேரிசை வெண்பா.

இவற்றை இருகுறள் நேரிசை வெண்பா என்பர்.

(நேரிசை வெண்பா)

“இன்னா செயினும் இனிய ஒழிகென்று

தன்னையே தானோவின் அல்லது-துன்னிக் கலந்தாரைக் கைவிடுதல் கானக நாட

விலங்கிற்கும் விள்ளல் அரிது”

நாலடியார் 76.

இஃது இரண்டு குறள்களாய் நடுவே முதற்றொடைக்கு ஏற்ற தனிச் சொல்லாய், முதற் குறள் ஈற்றில் ஓரசை மிக்கு வந்த இரு விகற்ப ஆசிடை நேரிசை வெண்பா.