178
இளங்குமரனார் தமிழ் வளம் – 10
தானேற்ற மான சருக்கரை மாமணியே
ஆனேற்றான் கக்சி அகம்’
-யா. வி. 62 மேற்.
-யா. கா. 24 மேற்.
இது பல விகற்பத்தான் வந்த ஏழடிப் பஃறொடை வெண்பா.
(பஃறொடை வெண்பா)
“சிற்றியாறு பாய்ந்தாடும் சேயரி உண்கணாய் வற்றா வளவயலும் வாய்மாண்ட ஏரியும் பற்றார்ப் பிணிக்கும் மதிலும் படுகிடங்கும் ஒப்ப உடைத்தாய் ஒலியோவா நீர்ப்புட்கள் தத்தி இரைதேரும் தையலாய்! நின்னூர்ப்பேர் ஒத்தாய வண்ணம் உரைநீ எனக் கூறக் கட்டலர் தாமரையுள் ஏழும் கடுமான்தேர்க் கத்திருவ ருள்ளைந்தும் காயா மரமொன்றும்
பெற்றவிழ்தேர்ந் துண்ணாதபேயின் இருந்தலையும்
ஒத்தியைந்த தெம்மூர்ப் பெயரென்றாள் வானவன்கை
வித்தாத நெல்லின் இறுதியும் கூட்டியக்கால்
விற்பொறித்த வேற்புருவத் தாள்.”
-தொல். செய். 114 இளம்.
-யா. வி. 62.
இது பன்னீரடியான் வந்த பலவிகற்பப் பஃறொடை வெண்பா. து பெருவல்லத்தைப் பற்றிக் கூறியது.
இன்னும் பலவடியான் வந்த பஃறொடை வெண்பா T இராமாயணம். புராணசாகரம் முதலாகவுடைய நூல்களில் உளவாகக் கூறுவார் யாப்பருங்கல விருத்தியுடையார். வந்துழிக் கண்டு கொள்க. இதனைத்,
“தொடை பல தொடுப்பன பஃறொடை வெண்பா
99
என்றார் சிறுகாக்கைபாடினியார்.
“பாதம் பலவரின் பஃறொடை வெண்பா
-யா.வி. 62 மேற்.
என்றார் ஆசிரியர் அமித சாகரனார்.
“நெடுவெண் பாட்டே முந்நால் அடித்தே
-செய். 156.
என்று அறுதியிட்டுரைத்தார் ஆசிரியர் தொல்காப்பியனார்.