180
இளங்குமரனார் தமிழ் வளம் – 10
வெண்பாவின் இனம் னம் இவை எனப் வை எனப் பெயரும் தொகையும் கூறினார். வெண்பாவினுள் 'ஒருதொடை ஈரடி' எனப்பெறும் குறட்பாவிற்கு இனம் இன்றோ எனின் உண்டு என்றற்கு அன்றே மேல் வரும் நூற்பா ஓதினார் என்க.
குறள்வெண் செந்துறை
54. அந்தங் குறையா தடியிரண் டாமெனிற் செந்துறை என்னும் சிறப்பிற் றாகும்
-யா. வி. 63 மேற்.
இந் நூற்பா என்ன கூறிற்றோ எனின் குறள் வெண்பாவின் இனம் இரண்டனுள் ஒன்றாகிய செந்துறை என்பதன் இலக் கணம் கூறிற்று.
க
(இ - ள்.) இறுதியடி அளவிற் குறையாமல் அடி இரண்டாக வருமானால் அது குறள் வெண் செந்துறை என்னும் சிறப் புடையதாகும் என்றவாறு.
அந்தங் குறைந்து வருதல் வெள்ளைக்கியல்பு ஆகலின் அதனை விலக்குதற்கு ‘அந்தங் குறையாது' என்றார். இவ்வாறு விலக்கவே ‘தன்றளை யன்றிப் பிறதளை வாரா' என்னும் யாப்புறவும் நீங்கிற்றென்று கொள்க. அன்றியும் ஒழுகிய ஓசையும் விழுமிய பொருளும் பயக்க இரண்டடியும் அளவடியாய் ஒத்து வந்தது குறள் வெண் வெந்துறை அல்லது செந்துறை வெள்ளை எனக் கொள்க. என்னை?
“ஒழுகிய ஓசையின் ஒத்தடி இரண்டாய் விழுமிய பொருளது வெண்செந் துறையே”
என்றார் ஆகலின்.
-யா. வி. 63.
குறள் விருத்தம் என ஒன்று இன்றோ எனின் மூவடியிற் சிறுமையுைடையதாய் விருத்தம் வாராது ஆதலின் ஈரடிக்குறள் வெண்பாவிற்கு விருத்தம் என்னும் இனமொன்று இன்றெனக்
கருதுக.
(எ - டு.)