உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 10.pdf/214

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

காக்கை பாடினியம்

197

என் என முடியும் நிலைமண்டில ஆசிரியப்பாக்களைச் சிலப்பதிகாரம், மணிமேகலை, பெருங்கதை ஆகியவற்றுள்

காண்க.

எனமுடியும் நிலைமண்டிலம் மேலே நூற்பாவிற்

காட்டினாம்.

(நிலைமண்டில ஆசிரியப்பா)

“கோண்மாக் கொட்குமென் றஞ்சுவல் ஒன்னார்க்

கிருவிசும்பு கொடுக்கும் நெடுவேல் வானவன்

கூடல் அன்ன குறுந்தொடி அரிவை

ஆடமை மென்றோள் நசைஇ நாடொறும்

வடிநுனை எஃகம் வலவயின் ஏந்திக்

கைபோற் காந்தள் கடிமலர் அவிழும்

மைதோய் சிலம்பன் நள்ளிருள் வருமிடம்”

-யா. வி. 74 மேற்.

இது மகர ஒற்று ஈறாய் வந்த நிலைமண்டில ஆசிரியப்பா. பிறவும் வந்தவழிக் கொள்க.

அடிமறிமண்டில ஆசிரியப்பா

62. உரைப்போர் குறிப்பின் உணர்வகை அன்றி இடைப்பான் முதலீ றென்றிவை தம்முள் மதிக்கப் படாதது மண்டில யாப்பே.

-யா. வி. 73 மேற்.

-யா. கா. 28 மேற்

இந் நூற்பா என்ன கூறிற்றோ எனின் நிறுத்த முறையான் அடிமறி மண்டில ஆசிரியப்பா ஆமாறு கூறிற்று.

-

(இ) ள்.) பாடுவோர் குறித்த குறிப்பால் உணர்ந்து கொள்வதை அல்லாமல், முதலிது ஈறிது இடையிது என்று எண்ணப் பெறாத் தன்மையுடன் நடப்பது யாது அஃது அடிமறி டில ஆசிரியப்பா என்றவாறு.

மண்

மண்டிலம் எனினும் அமையும் ; அடிமறி மண்டிலம் என்ன வேண்டியது என்னை எனின், ஏற்கும் ; எனினும் நூலாசிரியர் நோக்கை மயக்கற உணர்த்துதல் உரையாசிரியன் கடனாகலின் அடிமறி மண்டிலம்' எனப்பெற்றது என்க. அவன் கருத்து அன்ன தாகலின். என்னை? இடை டை முதல் ஈறு என்று இவை