198
- 10
இளங்குமரனார் தமிழ் வளம் - 10
தம்முள் மதிக்கப்படாதது - அஃதாவது அடிநிலை பெறாது மறிந்து செல்வது - என்றாராகலின்,
மண்டிலம் என்பது காரணக்குறி. சுழற்சி என்னும் பொருட்டு. 'மண்டில மாக்கள் என்பார் எங்கும் திரிந்து அரசாணை பரப்புவார் ஆதலும், கதிர் முதலாம் மண்டிலச் சுழற்சியும் கண்டு கொள்க.
பயில்வார்க்கு எவ்வடி முதல், எவ்வடி இடை, எவ்வடி ஈறு என்பது போதராது. ஆயின் யாத்தவன் குறிப்பில் முதல் இடை ஈறு உண்டன்றே; ஆகலின் ‘உரைப்போர் குறிப்பின்' என்றார். "மனப்படும் அடிமுத லாயிறின் மண்டிலம்”
என்றும்,
“கொண்ட அடிமுத லாயொத் திறுவது
-யா. வி. 73
மண்டில யாப்பென வகுத்தனர் புலவர்"
-சிறுகாக்கை பாடினியார்)
-யா. வி. 73 மேற்.
என்றும் கூறினார் பிறரும்.
(அடிமறி மண்டில ஆசிரியப்பா)
66
"மாறாக் காதலர் மலைமறந் தனரே
ஆறாக் கட்பனி வரலா னாவே
ஏறா மென்றோள் வளைநெகி ழும்மே
கூறாய் தோழியான் வாழு மாறே”
-தொல். செய். 115 பேரா மேற்.
-யா. வி. 73 மேற்.
(அடிமறி மண்டில ஆசிரியப்பா)
66
சூரல் பம்பிய சிறுகான் யாறே
சூரர மகளிர் ஆரணங் கினரே
வாரலை எனினே யானஞ் சுவலே
சாரல் நாட நீவர லாறே”
-தொல். செய் 113 இளம். மேற்.
-யா. வி. 73 மேற்.
-யா. கா. 28 மேற்.