காக்கை பாடினியம்
(ஆசிரியத்துறை)
“பாடகஞ்சேர் காலொருபால் பைம்பொற் கனைகழற்கால் ஒருபால் தோன்றும்
நீடு குழலொருபால் நீண்ட சடையொருபால்
வீடிய மானின் அதளொருபால் மேகலைசேர்ந்
தாடும் துகிலொருபால் அவ்வுருவம் ஆண்பெண்ணென் றறிவார் யாரோ”
207
-யா. வி. 76 மேற்.
இது நடுவிரண்டடியும் இரு சீர் குறைந்து வந்த ஆசிரியத்துறை.
66
(ஆசிரியத்துறை)
“கோடல் விண்டு கோபம் ஊர்ந்த கொல்லைவாய்
மாடு நின்ற கொன்றை ஏறி மௌவல் பூத்த பாங்கெலாம்
ஆடல் மஞ்ஞை அன்ன சாயல் அஞ்சொல் வஞ்சி மாதராய்! வாடல் ; மைந்தர் தேரும் வந்து தோன்றுமே”
-யா. வி. 76 மேற்.
இது நடுவிரண்டடியும் இருசீர் மிக்கு வந்த ஆசிரியத்துறை.
இதனைக்,
66
கடையதன் அயலடி கடைதபு நடையவும்
நடுவடி மடக்காய் நான்கடி யாகி
இடைஇடை குறைநவும் அகவற் றுறையே
என்றார் அமித சாகரனார்.
-யா. வி. 76.
ஆசிரியத் தாழிசை
67. அடிமூன் றொத்திறின் ஒத்தா ழிசையே.
இவ்வுரை மேற்கொள் நூற்பா என்ன கூறிற்றோ எனின் நிறுத்த முறையான் ஆசிரியத் தாழிசை ஆமாறு கூறிற்று.
-
ள்.) அடியால் மூன்றாகி அளவால் ஒத்து முடிவன யாவை அவை ஆசிரியத் தாழிசை என்றும் ஆசிரிய ஒத்தாழிசை என்றும் ஆம் என்றவாறு.
ஆசிரியத் தாழிசைக்கும் ஆசிரிய ஒத்தாழிசைக்கும் வேறு பாடு என்னை எனின் ஒரு பொருள் மேல் மூன்றடுக்கி வருவது
1.
சிறுகாக்கை பாடினியார் . யா. வி. 75 மேற்.