இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை
காக்கை பாடினியம்
"கொல்லையஞ் சாரல் குருந்தொசித்த மாயவன் எல்லைநம் மானுள் வருமேல் அவன்வாயில் முல்லையந் தீங்குழல் கேளாமோ தோழி”
209
-சிலப். 17:1-3.
ஒரு பொருள் மேல் மூன்றடுக்கி வந்த ஆசிரிய
வை ஒரு ஒத்தாழிசை.
(ஆசிரிய ஒத்தாழிசை)
"சாருண் ஆடைச் சாய்கோல் இடையன்
நேர்கொள் முல்லை நெற்றி வேய வாரார் வாரார் எற்றே எல்லே
“அத்துண் ஆடை ஆய்கோல் இடையன் நற்கார் முல்லை நெற்றி வேய
99
வாரார் வாரார் எற்றே எல்லே “துவருண் ஆடைச் சாய்கோல் இடையன் கவர்கான் முல்லை நெற்றி வேய வாரார் வாரார் எற்றே எல்லே”
இவையும் அன்ன.
“மூன்றடி ஒத்த முடிவின ஆய்விடின் ஆன்ற அகவற் றாழிசை யாகும்”
என்றார் யாப்பருங்கல முடையார்.
-யா. வி. 75 மேற்.
ஆசிரியப்பாவும் அதன் இனமும் முடிந்தன.
-யா. வி. 75.