உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 10.pdf/248

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

66

காக்கை பாடினியம்

'அவற்றொடு முடுகியல் அடியுடை அராகம் மடுப்பது வண்ணக ஒத்தா ழிசைக்கலி”

என இவர்க்கு வழிநூல் செய்தாரும் கூறினாராகலின்.

231

யா.வி. 84

அராக அடியாவது வண்ணக அடி. ஆகலின் பெயர் ஒன்றும் கூறவே அமையும் எனின், அதன் பல பெயர்களையும் தழுவிக் கோடற்கு இவ்வாறு கூறினார். "நீர்த்திரை போல... அம்போ தரங்கம்” என மேலே நூற்பாவில் ஓதியதூஉம் அறிக. அராகம்” எனினும், ‘வண்ணகம்' எனினும், ‘அடுக்கியல்’ எனினும், 'முடுகியல்' எனினும் ஒக்கும்.

அராக உறுப்பு என்னாது ‘அராக அடி' என்றார், அராகம் அளவடி முதலாகிய எல்லா அடியாலும் வரப்பெறும் என்றும், நான்கடிச் சிறுமையாய் எட்டடிப் பெருமையாய் எத்துணை அடியானும் வரப்பெறும் என்றும், அகவலும் வெள்ளையும் விரவியும் வரும் என்றும் அறிவித்தற்கு.

66

அளவடி முதலா அனைத்திலும் நான்கடி முதலா இரட்டியும் முடுகியல் நடக்கும்

என்றார் பிறரும்.

-யா. கா. 31 மேற்.

-யா. வி. 84 மேற்.

வண்ணகமாவது இஃது என்றார்; அஃது எவ்விடத்து வந்து கலியுள் நடக்கும் எனக் கூறிற்றிலரால் எனின், வரன் முறையே கூறும் ஆகலின் கூறார் ஆயினார். வரன்முறை என்னை எனின், தரவு தாழிசை தனிச்சொல் சுரிதகம் என்னும் முறையில் நேரிசை ஒத்தாழிசைக் கலிப்பா வரும் என்று கூறினார். பின்னைத் தாழிசைக்கும் தனிச் சொல்லுக்கும் இடையே அம்போ தரங்கம் பெற்று ஐந்துறுப்பாகி நடப்பது அம்போ தரங்க ஒத்தாழிசைக் கலிப்பா என்றார். அதனால் அம்முறையே முறையாய், தாழிசைக்கும் அம்போ தரங்கத்திற்கும் இடையே வருவது வண்ணகம் என வருமிடம் குறிப்பால் காட்டினார் என்க.

(வண்ணக ஒத்தாழிசைக் கலிப்பா)

“விளங்குமணிப் பசும்பொன்னின் விரித்தமைத்துக் கதிர்கான்ற துளங்குமணிக் கனைகழற்கால் துறுமலர் நறும்பைந்தார்ப்

பரூஉத்தடக்கை மதயானைப் பகட்டெழில் நெரிகுஞ்சி

குரூஉக்கொண்ட மணிப்பூணோய் குறையிரந்து முன்னாட்கண்