232
இளங்குமரனார் தமிழ் வளம் – 10
மாயாத வனப்பினையாய் மகிழ்வார்க்கும் அல்லார்க்கும் தாயாகித் தலையளிக்கும் தண்டுறை ஊரநீ.
இது தரவு.
காட்சியாற் கலப்பெய்தி எந்திறத்துக் கதிப்பாகி மாட்சியா றறியாத மரபொத்தாய் கரவினாற் பிணிநலம் பிரிவெய்திப் பெருந்தடந்தோள் வனப்பழிய அணிநலம் தனியேவந் தருளுவதும் அருளாமோ? அன்பினால் அமிழ்தளைஇ அறிவினால் பிறிதின்றிப் பொன்புனை பூணாகம் பசப்பெய்தப் பொழிலிடத்துப் பெருவரைத்தோள் அருளதற் கிருளிடைத் தமியையாய்க் கருவரைத்தோள் கதிர்ப்பிக்கும் காதலும் காதலோ? பாங்கனையே வாயிலாப் பலகாலும் வந்தொழுகும் தேங்காத கரவினையும் தெளியாத இருளிடைக்கட் குடவரைவேய்த் தோளிணைகள் குளிர்ப்பிப்பான்
தடவரைத்தார் அருளுநின் தகுதியும் தகுதியோ ? இவை தாழிசை.
66
‘தாதுறு முறிசெறி தடமலர் இடையிடை
தழலென விரவின பொழில் ; போதுறு நுறுவிரை புதுமலர் தெரிதரு கருநெய்தல் விரிவன கழி ; தீதுறு திறமறு கெனநனி முனமுனம் துணையொடு பிணைவன துறை;
மூதுறும் ஒலிகலி நுரைதரு திரையொடு கழிதொடர் புடையது கடல்.
இவை நான்கும் அராகம்.
தமியையாய்த்
கொடுந்திறல் உடையன சுறவெறி கொட்பதனால் இடுங்கழி இரவருதல் வேண்டாவென் றிசைத்திலமோ ?
கருநிறத் தெறுதொழிற் கராம்பெரி துடைமையால் இருணிறத் தொருகானல் இரவாரல் என்றிலமோ?
இவை நாற்சீர் ஈரடி இரண்டு அம்போ தரங்கம். நாணொடு கழிந்தன்றால் பெண்ணரசி நலத்தகையே ;