காக்கை பாடினியம்
துஞ்சலும் ஒழிந்தன்றால் தொடித்தோளி தடங்கண்ணே ; அரற்றொடு கழிந்தன்றால் ஆரிருளெம் ஆயிழைக்கே ; நயப்பொடு கழிந்தன்றால் நனவதுவும் நன்னுதற்கே. வை நாற்சீர் ஓரடி அம்போ தரங்கம்.
அத்திறத்தால் அசைந்தன தோள் ; அலரதற்கு மெலிந்தன கண் ;
பொய்த்து ரையால் புலர்ந்தது முகம் ; பொன்னிறத்தால் போர்த்தன முலை ; அழலினால் அசைந்தது நகை ;
அணியினால் ஒசிந்த திடை ;
குழலினால் அவிர்ந்தது முடி ;
குறையினாற் கோடிற்று நிறை.
இவை முச்சீர் ஓரடி எட்டு அம்போ தரங்கம். உட்கொண்ட தகைத்தொருபால் ;
உலகறிந்த அலர்த்தொருபால் ; கட்கொண்டல் துளித்தொருபால் ;
கழிவெய்தும் படித்தொருபால் ;
பரிவுறூஉம் தகைத்தொருபால் ;
படர்வுறூஉம் பசப்பொருபால் ;
இரவுறூஉம் துயரொருபால் ;
இளிவந்த எழிற்றொருபால் ;
மெலிவுவந் தலைத்தொருபால் ;
விளர்ப்புவந் தடைத்தொருபால் ;
பொலிவுசென் றகன்றொருபால் ;
பொறைவந்து கூர்ந்தொருபால் ;
காதலிற் கதிர்ப்பொருபால் ;
கட்படாத் துயரொருபால் ;
ஏதிலார்சென் றணைந்தொருபால் ;
இயல்நாணிற் செறிவொருபால்.
இவை இருசீர் ஓரடிப் பதினாறு அம்போ தரங்கம்.
எனவாங்கு,
இது தனிச்சொல்.
233