240
இளங்குமரனார் தமிழ் வளம் – 10
(தரவிணைக் கொச்சகம்)
மாமலர் முண்டகம் தில்லையோ டொருங்குடன் கான லணிந்த உயர்மணல் எக்கர்மேல் சீர்மிகு சிறப்பினோன் மரமுதல் கைசேர்த்த நீர்மலி கரகம்போல் பழந்தூங்கு முடத்தாழைப் பூமலர்ந் தவைபோலப் புள்ளல்குந் துறைவகேள்: ஆற்றுதல் என்பதொன் றலந்தவர்க் குதவுதல் போற்றுதல் என்பது புணர்ந்தாரைப் பிரியாமை பண்பெனப் படுவது பாடறிந் தொழுகுதல் அன்பெனப் படுவது தன்கிளை செறாஅமை அறிவெனப் படுவது பேதையர் சொல்நோன்றல் செறிவெனப் படுவது கூறியது மறா அமை நிறையெனப் படுவது மறைபிறர் அறியான மை முறையெனப் படுவது கண்ணோடா துயிர்வௌவல் பொறையெனப் படுவது போற்றாரைப் பொறுத்தல் ; இவை இரண்டும் தரவு.
ஆங்கதை அறிந்தனி ராயினென் தோழி நன்னுதல் நலனுண்டு துறத்தல் கொண்க தீம்பால் உண்பவர் கொள்கலம் வரைதல் நின்றலை வருந்தியாள் துயரம் சென்றனை களைமோ பூன்கநின் தேரே.
இது சுரிதகம்.
- கலித்தொகை 133.
இது தனிச்சொல் இன்றித் தரவு இரண்டாய்ச் சுரிதாகத் துடன் முடிந்த தரவிணைக் கொச்சகக் கலிப்பா.
66
(சுரிதகத் தரவிணைக் கொச்சகம்)
வடிவுடை நெடுமுடி வானவர்க்கும் வெலற்கரிய கடிபடு நறும்பைந்தார்க் காவலர்க்கும் காவலனாய்க் கொடிபடு வரைமாடக் கோழியார் கோமானே!
இது தரவு.
எனவாங்கு,
து தனிச்சொல்.