காக்கை பாடினியம்
துணைவளைத்தோள் இவள்மெலியத் தொன்னலம்
துறப்புண்டாங்
கிணைமலர்த்தார் அருளுமேல் இதுவதற்கோர் மாறென்று துணைமலர்த் தடங்கண்ணார் துணையாகக் கருதாரோ
இதுவும் தரவு.
அதனால்,
இது தனிச்சொல்.
செவ்வாய்ப் பேதை இவள்திறத்
தெவ்வா றாங்கொலிஃதெண்ணிய வாறே’
இது சுரிதகம்.
241
-யா. வி. 86.
-யா. கா. 32.
இது தரவு இரட்டித்துச் சுரிதகத்துடன் வந்த கொச்சகம். சுரிதகத் தரவிணைக் கொச்சகம் என்பது இது.
(சிஃறாழிசைக் கொச்சகம்)
பரூஉத்தடக்கை மதயானைப் பணையெருத்தின் மிசைத்தோன்றிக் குரூஉக்கொண்ட வெண்குடைக்கீழ்க் குடைமன்னர் புடைசூழப் படைப்பரிமான் தேரினொடும் பரந்துலவு மறுகினிடைக் கொடித்தானை இடைப்பொலிந்தான் கூடலார் கோமானே.
இது தரவு.
ஆங்கொரு சார்,
இது தனிச்சொல்.
உச்சியார்க் கிறைவனா யுலகெல்லாம் காத்தளிக்கும் பச்சையார் மணிப்பைம்பூண் புரந்தரனாப் பாவித்தார் வச்சிரங் காணாத காரணத்தால் மயங்கினரே. ஆங்கொரு சார்,
இது தனிச்சொல்,
அக்காலம் அணிநிரைகாத் தருவரையாற் பகைதவிர்த்து வக்கிரனை வடிவழித்த மாயவனாப் பாவித்தார் சக்கரங் காணாத காரணத்தால் சமழ்த்தனரே.
ஆங்கொரு சார்,
இது தனிச்சொல்.