10
இளங்குமரனார் தமிழ் வளம் – 10
றாகலும் அந்தம் இணையசை வந்தன
கூறிய வஞ்சிக் குரியன ஆகலும்
ஆகுந என்ப அறிந்திசி னோரே’
99
என்றும் விரித்துரைத்தார். 'இம்முறையைப் பின்னூலோர் போற்றியமை கண்கூடு.
66
66
இயலசை மயக்கம் இயற்சீர்; ஏனை உரியசை மயக்கம் ஆசிரிய உரிச்சீர்’”
"முன்நிரை வரினும் அன்ன வாகும்.
என ஆசிரியர் தொல்காப்பியனார் இயற்சீர், ஆசிரிய உரிச்சீர்களை விதந்துரைத்தார். ஆனால் காக்கைபாடினியார்,
66
'ஓரோ வகையினால் ஆகிய ஈரசைச் சீரியற் சீரெனச் செப்பினர் புலவர்"
என்றும்,
"இயற்சீர் எல்லாம் ஆசிரிய உரிச்சீர்" என்றும் கூறினார். அவர் தம் கூற்றே பெருவழக்காகி நிலைபெற்றது.
நான்கடியான் அமைந்த வெண்பாவை “ஒத்த”து என்றும், நான்கடியின் மிக்க வெண்பாவை “நெடுவெண் பாட்டு” என்றும், நான்கடியிற் சுருங்கிய வெண்பாவைக் “குறுவெண்பாட்டு என்றும் தொல்காப்பியனார் குறியிட்டு வழங்கினார்.
காக்கைபாடினியார் நெடுவெண் பாட்டைப் பஃறொடை வெண்பா என்றும், ஒத்தது என்பதை நேரிசை வெண்பா, இன்னிசை வெண்பா என்றும், குறுவெண்பாட்டைக் குறள் வெண்பா என்றும் குறியிட்டு அவற்றின் இலக்கணத்தை விரித் தோதினார்; நேரிசை வெண்பா இன்னிசை வெண்பா என்பவற்றின் அமைதியைத் தனித்தனி நூற்பாக்களில் விளக்கினார்.
“வண்ணகந் தானே,
தரவே தாழிசை எண்ணே வாரமென்
றந்நால் வகையிற் றோன்று மென்ப"
என்று வண்ணக ஒத்தாழிசை இலக்கணத்தைக் கூறினார் ஆசிரியர் தொல்காப்பியனார்.
ஆ
வண்ணகம்
என்பதன்
1. “நேர்பசை நிரைபசை வேண்டாது நேரசை நிரையசை வேண்டாது நாலசைப் பொதுச்சீர் வேண்டினார் காக்கை பாடினியார் முதலியஒருசாராசிரியர்” என்றும்,
66
'காக்கை பாடினியார் முதலிய தொல்லாசிரியர் தம் மதம் பற்றி ஈண்டு நாலசைச்சீர் எடுத்தோதினார்” என்றும் வரும் யாப்பருவிருத்தியுரை நோக்குக. (யா. வி. 10.) “காக்கைபாடினியார் முதலாகிய ஒருசார் ஆசிரியர் மாப் பெரும்புலவர் தம் மதம் பற்றி நாலசைசீர் விரித்தோதினார் இந்நூல் யார்” என்று மேலும் கூறுமாறும் கருதுக. (யா. வி.பக்.448)