காக்கை பாடினியம்
11
விளக்கத்தை, வண்ணித்துப் புகழ்தலின் வண்ணகம் எனப்படும். என்னை? தரவினானே தெய்வத்தினை முன்னிலையாகத் தந்து நிறீஇப் பின்னர் அத் தெய்வத்தினைத் தாழிசையானே வண்ணித்துப் புகழ்தலின் அப் பெயர் பெற்றதாகலின். ஒழிந்த உறுப்பான் வண்ணிப்பினும் சிறந்த உறுப்பு இது வென்க' என்று பேராசிரியர் உரைக்குமாற்றான் அறியலாம்.
காக்கைபாடினியார் வண்ணகத்தை அராகம் எனக் கொண்டு இலக்கணம் வகுத்தார்.
66
“அச்சொலப் பட்ட உறுப்போ டராகவடி
வைத்த நடையது வண்ணகம் ஆகும்”
என்பது அவர் நூற்பா. தொல்காப்பியனார் வழியொடு இவ்வழி மாறுபாடுடையதாகலின், "இனி வண்ணகம் என்பது அராகமென உரைத்து அவ்வுறுப்புடையன வண்ணக ஒத்தாழிசை எனவும் சொல்லுவாரும் உளர். எல்லா ஆசிரியரும் செய்த வழி நூற்கு இது முன்னூலாதலின் இவரோடு மாறுபடுதல் மரபன்றென மறுக்க. இசை நூலுள்ளும் மாறுபடின் அஃது அவர்க்கும் மரபன்றென்பது” என மறுத்தெழுதினார் பேராசிரியர் (செய். 140.) எனினும், யாப்பருங்கலம், யாப்பருங்கலக்காரிகை முதலாய நூல்கள் காக்கைபாடினியார் வழியையே மேற் கொண்ட
66
ன.
'அவற்றொடு முடுகியல் அடியுடை அராகம் மடுப்பது வண்ணக ஒத்தா ழிசைக்கலி’
என்பது யாப்பருங்கலம்.
66
அசையடி முன்னர் அராகம்வந் தெல்லா உறுப்புமுண்டேல் வசையறு வண்ணக ஒத்தா ழிசைக்கலி”
என்பது யாப்பருங்கலக்காரிகை.
னிக் கொச்சகக் கலியின் யாப்புறவைத்
66
“தரவும் போக்கும் பாட்டிடை மிடைந்தும்
ஐஞ்சீர் அடுக்கியும் ஆறுமெய் பெற்றும்
வெண்பா இயலான் வெளிப்படத் தோன்றும்
பாநிலை வகையே கொச்சகக் கலியென நூல்நவில் புலவர் நுவன்றறைந் தனரே”
என்றார் தொல்காப்பியனார், இவ்விலக்கணத்தைக் காக்கை
பாடினியார்,