264
இளங்குமரனார் தமிழ் வளம் – 10
நிலமுறையின் ஆண்ட நிகரில்லார் மாட்டும் சிலமுறை யல்லது செல்வங்கள் நில்லா இலங்கும் எறிபடையும் ஆற்றலும் அன்பும் கலந்ததங் கல்வியும் தோற்றமும் ஏனைப் பொலஞ்செய் புனைகலனோ டிவ்வாற னாலும் விலங்கி வருங்கூற்றை விலக்கலும் ஆகா அனைத்தாதல் நீவிரும் காண்டிர்-நினைத்தக்க கூறிய வெம்மொழி பிறழாது
தேறிநீர் ஒழுகிற் சென்றுபயன் தருமே”
து வாயுறை வாழ்த்து மருட்பா.
-யா. வி. 55 மேற்.
-யா. கா. 35 மேற்.
உயர்ந்தோரிடத்து அடங்கி நடத்தல் கடனென்று மொழி
வது செவியறிவுறூஉ ஆகும். என்னை?
"செவியுறை தானே,
பொங்குதல் இன்றிப் புரையோர் நாப்பண்
அவிதல் கடனெனச் செவியுறுத் தன்றே”
என்றார் ஆகலின்.
(மருட்பா)
பல்யானை மன்னர் முருங்க அமருழந்து கொல்யானை தேரோடும் கோட்டந்து-நல்ல தலையாலங் கானம் பொலியத்-தொலையாப் படுகளம் பாடுபுக் காற்றிப் பகைஞர் அடுகளம் வேட்டோன் மருக !-அடுதிறல் ஆளி நிமிர்தோள் பெருவழுதி !-எஞ்ஞான்றும் ஈரம் உடையையாய் என்வாய்ச்சொற் கேட்டி, உடைய உழவரை நெஞ்சனுங்கக் கொண்டு வருங்கால் உழவர்க்கு வேளாண்மை செய்யல் ; மழவர் இழைக்கும் வரைகாண் நிதியீட்டம் காட்டும் அமைச்சரை ஆற்றத் தெளியல் ; அடைத்த அரும்பொருள் ஆறன்றி வௌவல் ; ஈகைப் பெரும்பொருள் ஆசையாற் சென்று
-தொல். பொருள். 426.