உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 10.pdf/282

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

து

காக்கை பாடினியம்

பெருங்குழிசி மன்ற மறுக அகழாதி ; என்றும் மறப்புற மாக மதுரையார் ஓம்பும்

அறப்புறம் ஆசைப் படேற்க ;-அறத்தால் அவையார் கொடுநாத் திருத்தி ;-நவையாக நட்டார் குழிசி சிதையாதி :-ஒட்டார்

செவிபுதைக்கும் தீய கடுஞ்சொற் கலிபடைத்தாய் ! கற்றார்க் கினனாகிக் கல்லார்க் கடிந்தொழுகிச் செற்றார்ச் செகுத்துநிற் சேர்ந்தாரை ஆக்குதி ; அற்றம் அறிந்த அறிவினாய் !-மற்றும் இவைஇவை நீயா தொழுகின் நிலையாப் பொருகடல் ஆடை நிலமகள்

ஒருகுடை நீழல் துஞ்சவள் மன்னே”

து செவியறிவுறூஉ மருட்பா

“கலிநிலை வகையும் வஞ்சியும் பெறாஅ"

265

-யா. வி. 55 மேற்.

-யா. கா. 35 மேற்.

என்றமையால் புறநிலை வாழ்த்து முதலியவை வெண்பாவானும், ஆசிரிய மானும் வருதலும் கொள்க.

கைக்கிளையாவது ஒருதலைக்காமம். காட்சி முதற் கொண்டு கூடுதல் வரை ஒரு பால் புலம்பிக் கேட்போர் இல்லா மொழியின தாகும். என்னை?

“காட்சி முதலாக் கலவியின் ஒருதலை

வேட்கையிற் புலம்புதல் கைக்கிளை அதுதான் கேட்போ ரில்லாக் கிளவிகள் பெறுமே

என்றார் ஆகலின்.

-யா. கா. 35,

(மருட்பா)

"திருநுதல் வேர்வரும்பும் தேங்கோதை வாடும்

இருநிலம் சேவடியும் தோயும்-அரிபரந்த

போகித ழுண்கணும் இமைக்கும்

ஆகும் மற்றிவள் அகலிடத் தணங்கே”

இது கைக்கிளை மருட்பா.

-பு. வெ. 287.