உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 10.pdf/286

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

66

காக்கை பாடினியம்

(நேரிசை ஆசிரியப்பா)

'அளிதோ தானே பாரியது பறம்பே

நளிகொள் முரசின் மூவரும் முற்றினும் உழவர் உழாதன நான்குபயன் உடைத்தே; ஒன்றே,

சிறியிலை வெதிரின் நெல்விளை யும்மே ; இரண்டே,

தீஞ்சுளைப் பலவின் பழம்ஊழ்க் கும்மே ; மூன்றே,

கொழுங்கொடி வள்ளிக் கிழங்குவீழ்க் கும்மே; நான்கே,

அணிநிற ஓரி பாய்தலின் மீதழிந்து திணிநெடுங் குன்றம் தேன்சொரி யும்மே; வான்க ணற்றவன் மலையே ; வானத்து மீன்க ணற்றதன் சுனையே ; ஆங்கு மரந்தொறும் பிணித்த களிற்றினிர் ஆயினும் புலந்தொறும் பரப்பிய தேரினிர் ஆயினும் தாளிற் கொள்ளலிர் வாளிற் றாரலன் யானறி குவனது கொள்ளு மாறே ;

சுகிர்புரி நரம்பின் சீறியாழ் பண்ணி

விரையொலி கூந்தல்நும் விறலியர் பின்வர

ஆடினிர் பாடினிர் செலினே

நாடும் குன்றும் ஒருங்கீ யும்மே"

269

-புறநா. 109. இவ்வாசிரியத்துள் ‘ஒன்றே,’ ‘இரண்டே,’ ‘மூன்றே,’ ‘நான்கே எனத் தனிச்சொல் அடிமுதற்கண் தொடுத்து வந்தது.

'உலகினுள்,

(தரவுகொச்சகம்)

பெருந்தகையார் பெருந்தகைமை பிறழாவே பிறழினும் இருந்தகைய இறுவரைமேல் எரிபோலச் சுடர்விடுமே ; சிறுதகையார் சிறுதகைமை சிறப்பெனினும் பிறழ்வின்றி உறுதகைமை உலகினுக்கோர் ஒப்பாகித் தோன்றாதே"

-யா. வி. 94 மேற்.