270
இளங்குமரனார் தமிழ் வளம் – 10
இத் தரவு கொச்சகக் கலியுள் ‘உலகினுள்' என அடி முதற்கண் தனிச்சொல் வந்தது.
(வெண்கலிப்பா)
“நோக்குங்கால் நோக்கித் தொழூஉம் பிறர்காண்பார் தூக்கிலி தூற்றும் பழியெனக் கைகவித்துப்
போக்குங்காற் போக்கும் நினைத்திருக்கும் மற்றுநாம் காக்கு மிடமன் றினி ;
எல்லா எவன்செய்வாம் ;
பூக்குழாய் செல்லல் அவனுழைக் கூஉய்க்கூஉய் விரும்பியான் வீட்டேனும் போல்வலென் றோண்மேற் கரும்பெழுது தொய்யிற்குச் செல்வலீங் காக
இருந்தாயோ என்றாங் கிற ;
அவனின்,
திருந்தடி மேல்வீழ்ந் திரக்குநோய் தீர்க்கும்
மருந்துநீ ஆகுத லான் ;
இன்னும்
கடம்பூண் டொருகால்நீ வந்தை யுடம்பட்டாள்
என்னாமை என்மெய் தொடு ;
இஃதோ அடங்கக் கேள் ;
நின்னொடு சூழுங்கால் நீயும் நிலங்கிளையா
என்னொடு நிற்றல் எளிதன்றோ மற்றவன்
தன்னொடு நின்று விடு”
-கலித். 63.
வெண்கலியுள் அடிமுதற்கண் தனிச்சொற்கள் பல வந்தன.
“உலகே,
(குறளடி வஞ்சிப்பா)
முற்கொடுத்தார் பிற்கொளவும்
பிற்கொடுத்தார் முற்கொளவும்
உறுதிவழி ஒழுகுமென்ப ; அதனால்,
நற்றிறம் நாடுதல் நன்மை
பற்றிய யாவையும் பரிவறத் துறந்தே”
-யா. வி. 94 மேற்.