உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 10.pdf/289

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

272

இளங்குமரனார் தமிழ் வளம் – 10

குழாஅங் கொண்ட குருதியம் புலவொடு

கழாஅத் தலையர் கருங்கடை நெடுவேல் இன்ன மறவர்த் தாயினு மன்னோ என்னா வதுகொல் தானே

பன்னல் வேலியிப் பணைநல் லூரே”

_

-புறநானூறு 345.

இப் புறப்பாட்டில் வஞ்சியடியின் இடையிலும், ஈற்றிலும் தனிச்சொல் வந்தது.

66

வஞ்சி மருங்கின் இறுதியும் ஆம் எனினும் அமையுமாகக் 'கண்டனர் மாதோ கடனறிந் தோரே” என விதந்துரைத்த தென்னை எனின், நான்குவகைப் பாவினுள்ளும் அடிமுதற்கண் 'சீர்' தனிச் சொல்லாக வரும் எனினும் வஞ்சிப்பாவின்கண் அசையே தனிச்சொல்லாக வருதலும். உகர ஈற்று நேரீற்றியற் சீர் தனிச்சொல்லாக வருதலும் சிறப்பு என்றும், வஞ்சிப்பாவின் டையும் இறுதியும் அசையும் உகர ஈற்ற நேரீற்று இயற்சீருமே தனிச்சொல்லாக வரும் என்றும் வலியுறுத்தற்கு அவ்வாறு கூறப்பெற்றது என்க.

'களிறணைப்பக் கலங்கின' என்னும் பாடலில் வஞ்சி யடியின் இடையிலும் ஈற்றுலும் அசையும் உகர ஈற்று நேரீற்று இயற் சீருமே தனிச்சொல்லாக வந்தமை கண்டறிக.

66

(நேரிசை ஆசிரியப்பா)

“வாள், வலந்தர மறுப்பட்டன செவ்வானத்து வனப்புப் போன்றன தான், களங்கொளக் கழல் பறைந்தன கொல்ல் லேற்றின் மருப்புப் போன்றன தோல், துவைத்தம் பிற்றுளை தோன்றுவ நிலைக்கொராஅ விலக்கம் போன்றன மா எறிபதத்தான் இடம்காட்டக் கறுழ்பொருத செவ்வாயான் எருத்துவவ்விய புலிபோன்றன களிறு கதவெறியாச் சிவந்துராஅய் நுதிமழுங்கிய வெண்கோட்டான் உயிருண்ணுங் கூற்றுப் போன்றன நீயே, அலங்குளைப் பரீஇ யிவுளிப்