காக்கை பாடினியம்
273
பொலந்தேர் மிசைப் பொலிவுதோன்றி
மாக்கடல் நிவந்தெழு தரும்
செஞ்ஞாயிற்றுக் கவினை மாதோ
அனையை யாகன் மாறே
தாயில் தூவாக் குழவி போல
ஓவாது கூவுநின் னுடற்றியோர் நாடே”
-புறநா. 4.
இப் புறப்பாட்டுள் வஞ்சியடிகளின் முன்னே அசையும், உகர ஈற்று நேரீற்று இயற்சீரும் வருதலும், 'நீயே' என மாச்சீர் அருகி வருதலும் கண்டு கொள்க.
இனி இவ் விதப்பால் கலிப்பாவின்கண் ஓர் அடியே தனிச்சொல்லாக வருமாறும் அமைத்துக் கொள்க.'
'காமர் கடும்புனல்' என்னும் கலிப்பாவின்கண் (கா.பா.பக். 245) அவனுந்தான், எனவாங்கு, நல்லாய் எனச் சீர் தனிச் சொல்லாக வருவதுடன்,
'சிறுகுடி யீரே ! சிறுகுடி யீரே'
என அடியே தனிச் சொல்லாக வந்தது.
த் தனிச்சொல் வருமாற்றை,
66
அடிமுதற் பொருள்பெற வருவது தனிச்சொல் ; அஃ திறுதியும் வஞ்சியுள் இயலும் என்ப”
என அமிதசாகரனாரும் கூறினார்.
"தனியே
அடிமுதற் பொருள்பெற வருவது தனிச்சொல் ; அஃ திறுதியும் வஞ்சியுள் நடக்கும் என்ப
என அவிநயனாரும் கூறினார்.
-யா. வி. 95.
-யா. வி. 95.
2. புறநடை
89. உணர்த்திய பாவினுக் கொத்த அடிகள்
ப
வகுத்துரை பெற்றியும் அன்றிப் பிறவும்
நடக்குந ஆண்டை நடைவகை யுள்ளே.
-யா. வி. 98 மேற்.